சிஎஸ்கே மேட்ச் டிக்கெட் போல திருமண அழைப்பிதழ் அடித்த ரசிகர்.. யாருப்பா அவரு?


சென்னை : ஐபிஎல்-ஐ பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் வெறி கொண்ட ரசிகர்கள் அதிகம். சமூக வலைதளங்களில் கூட இந்த அணியின் வீடியோக்கள் தான் டாப்பில் இருக்கும்.

இப்போது இந்த அணியின் ரசிகர் ஒருவர் தன் திருமண அழைப்பிதழை சிஎஸ்கே போட்டிகளுக்கு வழங்கும் டிக்கெட்கள் போன்ற டிசைனில் வடிவைமைத்துள்ளார்.

கொஞ்சம் உற்றுப் பார்க்கவில்லை என்றால் சிஎஸ்கே டிக்கெட் தான் என கடந்து விடுவோம். அந்த அளவுக்கு தத்ரூபமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது, இந்த அழைப்பிதழ்.

வினோத் என்ற அந்த ரசிகர், சிஎஸ்கே அணி ரசிகராக பல வீடியோக்கள் தயாரித்து, இணையதளத்தை தெறிக்க விட்டவர். இவருக்கு 2015ஆம் ஆண்டு ஐபிஎல்-இன் போது தோனி ஆட்டோகிராப் போட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்தார்.

வினோத் கூறும்போது, "ஒரு சிஎஸ்கே ரசிகராகவும், தோனி ரசிகராகவும், என் கல்யாண அழைப்பிதழில் ஏதாவது செய்ய விரும்பினேன். என் நண்பர் ஒருவர் கிராபிக் டிசைனராக இருக்கிறார். அவரும் சிஎஸ்கே ரசிகர். அவரிடம் பேசி, நாங்கள் இந்த டிக்கெட் வடிவ அழைப்பிதழை தயாரித்தோம்" என கூறினார்.

அவருக்கு வாழ்த்து சொல்லி சிஎஸ்கே அணியும் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் மிகவும் சிறப்பானது என கூறி இருக்கிறது.

Have a great day!
Read more...

English Summary

CSK fan designed his wedding invitation like CSK match ticket, going viral