பாதாளத்துல விழுந்தும், மீசைல மண் ஒட்டலியே.. டெஸ்ட் ரேங்கில் கெத்து காட்டும் இந்தியா


லண்டன் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

Advertisement

விராட் கோலி, ரவி சாஸ்திரி ஆகியோரின் வெற்றிநடை "பில்டப்"புக்கு பெரிய பின்னடைவாக கருதப்படும் இந்த தொடர் தோல்வி, ஒரு வகையில் இந்திய கிரிக்கெட்டை பாதிக்கவில்லை.

Explore Now: Cricket World Cup Action LIVE!
Advertisement

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதில், ஏற்கனவே, முதல் இடத்தில் இருந்த இந்திய அணி, 1-4 என டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தும் தன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பு 125 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி, பத்து புள்ளிகள் இழந்து தற்போது 115 புள்ளிகளுடன் முதல் இடத்திலேயே தொடர்கிறது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா 106 புள்ளிகளுடன் இருக்கின்றன. இங்கிலாந்து நான்காம் இடத்தை பிடித்து முன்னேறியுள்ளது

Advertisement

டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பு இங்கிலாந்து அணி 97 புள்ளிகள் மட்டுமே பெற்று ஐந்தாம் இடத்தில் இருந்தது. தற்போது 8 புள்ளிகள் அதிகம் பெற்று நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து அடுத்து இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் தன் அடுத்த டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதே போல, இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்தியா டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

சொந்த மண்ணில், வலுவில்லாத வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஆட உள்ள இந்தியா டெஸ்ட் தொடர் தோல்வியில் இருந்து மீளுமா?

English Summary

India retain No.1 spot in ICC test ranking even after a 1-4 series defeat against england
Advertisement