ரவி சாஸ்திரி சொன்னது உண்மையா?.. நியாயமான கேள்வி கேட்ட நிருபரிடம் எகிறிய கோலி


லண்டன் : இந்தியா, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ஒரு வழியாக முடித்து விட்டது. ஆனால், டெஸ்ட் தொடர் தோல்வி மிக மிக மோசமான பின்விளைவுகளை இந்திய அணிக்கு ஏற்படுத்த உள்ளது.

அந்த பின்விளைவுகளை இன்னும் இந்திய அணி சந்திக்காத நிலையில், நேற்று அளித்த பேட்டியில் கோலி ஒரு நிருபரிடம் கோபப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் தோல்வியை இதுவரை ரவி சாஸ்திரி, கோலி இருவருமே ஒப்புக்கொள்ளவில்லை. அணி நிர்வாகத்தில் செய்த தவறுகளை மறைத்து, சிறந்த அணி இதுதான் என வெற்றுக் கூப்பாடுகளை போட்டு வருகின்றனர்.

பேட்டி அளித்த கோலி

இந்தியா 1-4 என டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், அதற்கு பதில் அளிக்க வேண்டிய கோலி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றார். இது போன்ற தோல்விகளை சந்திக்கும் அணிகள் தோல்விக்கு என்ன காரணம் என கூறுவார்கள். தவறுகளை பற்றி பேசுவார்கள். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் செய்யும் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பார்கள். ஆனால், இந்த தொடர் முழுவதும் அப்படி எதையும் செய்யவில்லை இந்திய அணியின் கேப்டன் மரற்றும் பயிற்சியாளர். இந்திய அணி செய்த தவறுகளை பற்றி அவர்கள் வெளிப்படையாக பேசவே இல்லை.

நிருபர் கேட்ட கேள்வி

கோலியின் இந்த சந்திப்பிலும், இந்திய அணி போராடியது என சொல்லிக் கொண்டு இருந்தார் கோலி. அப்போது ஒரு நிருபர், "நீங்கள் நன்றாக போராடினீர்கள். ஆனால், ரவி சாஸ்திரி கூறுவது போல "கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த அணி" என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? அந்த கூற்று உங்களுக்கு அதிக சுமை அளிக்கவில்லையா?" என கேட்டார். அதற்கு "நாங்கள் அதை நம்ப வேண்டும்" என கூறினார் கோலி.

விடாத நிருபர்

கோலி நேரடியாக பதில் அளிக்காமல் மழுப்பியதால், அதே கேள்வியை மாற்றிக் கேட்டார் நிருபர். "ஆனால், இப்போது இருப்பது தான் கடந்த 15 வருடங்களில் சிறந்த இந்திய அணியா?" என கேட்டார். இப்போது கோலிக்கு கோபம் உச்சத்துக்கு ஏறிவிட்டது. "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என திருப்பிக் கேட்டார். அந்த நிருபர், "என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை" என கூறினார். கோலி, "அது உங்கள் எண்ணம். நன்றி" என கோபத்தை அடக்கிக் கொண்டு கூறினார்.

மக்களே நியாயத்தை சொல்லுங்க

ரவி சாஸ்திரி இப்போதுள்ள இந்திய அணிதான் சிறந்த அணி என கூறியதையே ஒருவராலும் ஏற்க முடியவில்லை. சரி அவர் ஏதோ காமெடி செய்கிறார் என விட்டுவிடலாம். ஆனால், பொறுப்பான கேப்டன் என நினைத்துக் கொண்டு இருக்கும் கோலி கூட அதை ஆதரித்து பேசுவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களே நீங்களே சொல்லுங்க.. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 1-4 என தோல்வி அடைந்த அணி தான் சிறந்த அணியா?

இல்லைன்னு சொன்னா கோலி கோபப்படுவாரோ?

Have a great day!
Read more...

English Summary

Kohli defends Ravi Shasthri’s best team in 15 years statement getting angry over media