கடைசியில், சச்சினிடமும் வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி.. பேஸ்புக்ல என்ன வேணும்னாலும் எழுதலாமா?


ஹைதராபாத் : தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சமீப காலமாக தெலுங்கு, தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வந்தார். எந்த ஆதாரமும் இல்லாமல் கிசுகிசு போன்ற தகவல்களை மட்டும் அளித்து வந்தார்.

தற்போது சினிமா நட்சத்திரங்கள் மீது புகார் அளித்து "போர்" அடித்து விட்டதோ என்னவோ, கிரிக்கெட் உலகின் சிறந்த வீரரான சச்சின் பற்றி சூசகமாக சேற்றை வாரி இறைத்துள்ளார். வழக்கம் போல இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

அவர் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த பதிவில், "சச்சின் டெண்டுல்கரன் என்ற ஒரு ரொமாண்டிக்கான ஆள், ஹைதராபாத் வந்த போது, "சார்மி'ங்" ஆன பெண்ணை சந்தித்தார். அதற்கு, சாமுண்டேஸ்வர் சாமி என்பவர் உடந்தை" என்பது போன்ற விஷயங்களை கூறி இருக்கிறார்.

இதில் சார்மிங் பெண் என அவர் குறிப்பிடுவது நடிகை சார்மி எனவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை இதுவரை சச்சின் தரப்பில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

எதற்காக இப்போது ஸ்ரீ ரெட்டி சச்சின் மீது தேவையற்ற, ஆதாரமற்ற ஒரு புகாரை கூற வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தெலுங்கு சினிமாவில் அவர் பல குற்றச்சாட்டுக்களை அளித்து, அங்கே ஒன்றும் நடக்காமல், அடுத்து தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் பற்றி கிசுகிசு சொல்ல ஆரம்பித்தார்.

இங்கே தமிழ்நாட்டில் சில இயக்குனர்கள், நடிகர்கள் வழக்கு போட்டு இருப்பதாக தெரிகிறது. இங்கேயும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அடுத்து, விளையாட்டு வீரர்களை குறி வைத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது குற்றச்சாட்டுகள், புகார்கள் எதையும் அவர் இதுவரை நீதிமன்றத்திலோ, காவல் நிலையத்திலோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரெட்டி தன் இஷ்டத்துக்கு பிரபலங்கள் மீது புகார்கள், குற்றச்சாட்டுக்கள் வைத்து வருகிறார். பாரத ரத்னா விருது வாங்கிய, உலகின் சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் மீது இப்படி புகார் சொல்வது சரி தானா? ஏற்கனவே பலரும் கூறியது போல, இவர் உண்மை சொல்பவராக இருந்தால் நீதிமன்றத்தில் தான் தன் புகார்களை சொல்ல வேண்டும்.

இந்த பேஸ்புக் கிசுகிசு சொல்வது எல்லாம், தான் பிரபலம் ஆவதற்கும், மிரட்டி பணம் சம்பாதிக்கவும் தான் செய்கிறார் என இவருக்கு எதிரானவர்கள் கூறுவது உண்மை தான் என்பது போல் தான் இருக்கிறது இவரது செயல்கள். இப்போது சினிமா நடிகையாக இருந்த ஸ்ரீரெட்டி சினிமா நபர்களை பற்றி சொல்லி வந்தார். தற்போது கிரிக்கெட் வீரர் பக்கம் வந்துள்ளார். அதுவும் சாதாரண வீரர்கள் பற்றி சொன்னால் பெரிய அளவு "ரீச்" ஆகாது என்பதால் சச்சின் பெயரை இழுத்துள்ளார் என தெரிகிறது. இந்த கிசுகிசுக்களை நிறுத்த, காவல்துறை அல்லது நீதிமன்றம் விரைந்து ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்கள் கோரிக்கை.

Have a great day!
Read more...

English Summary

Sri Reddy now targets Sachin Tendulkar, is it all for popularity?. After cinema stars, now she is targeting the cricket star.