சாஃப் கோப்பை கால்பந்து.. இறுதி போட்டியில் இந்தியா.. பாகிஸ்தானை விரட்டியது!


டாக்கா: தெற்காசிய கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மன்வீர் சிங் 2 கோல்கள் அடித்தார். சுமீத் பஸ்ஸி ஒரு கோல் போட்டு இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தனர். டாக்காவில் உள்ள பங்கபந்து ஸ்டேடியத்தில் இன்று இரவு இந்த அரை இறுதிப் போட்டி நடைபெற்றது.

முதல் பாதியில் இரு அணிகளுமே கோலடிக்கவில்லை. இந்த நிலையில் 49வது நிமிடத்தில் மன்வீர் முதல் கோலைப் போட்டார். அடுத்து 69வது நிமிடத்தில் அவரே 2வது கோலையும் போட்டார். 83வது நிமிடத்தில் பஸ்ஸி 3வது கோலை அடித்தார். 88வது நிமிடத்தில் பாகிஸ்தானின் ஹசன் பஷீர் கோலடித்தார். ஆனால் அதன் பிறகு கோல் ஏதும் விழவில்லை.

இறுதிப் போட்டி செப்டம்பர் 15ம் தேதி நடைபெறுகிறது. அப்போட்டியில் மாலத்தீவுகளை இந்தியா சந்திக்கிறது. முன்னதாக நேபாள அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் மாலத்தீவு வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

Read More About: football india pakistan final

Have a great day!
Read more...

English Summary

Two strikes from magical Manvir Singh and an opportunistic header from substitute Sumeet Passi helped defending champions India breeze past Pakistan 3-1 to romp into the final of the SAFF Suzuki Cup 2018 at the Bangabandhu Stadium in Dhaka on Wednesday (September 12).