For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமன்வெல்த் வரலாற்றில் இந்தியா சாதனை.. பிவி சிந்துவுக்கு முதல் தங்கம்.. 4வது இடத்தை பிடித்த இந்தியா

பிர்மிங்காம்: 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் வரலாற்று போட்டியில் இந்தியா 19வது தங்கத்தை கைப்பற்றி, நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளியது.

Recommended Video

CWG P.V.Sindhu | முதல் Gold Medal வென்றார் பி.வி.சிந்து *Sports | Oneindia Tamil

கடந்த 10 நாட்களாக நடைபெற்ற இந்த தொடரின் இறுதி நாளில் இந்தியா 5 தங்கம் உள்ளிட்ட 6 பதக்கம் வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறதிச் சுற்றில் பிவி சிந்து, கனமா வீராங்கனை மிட்வெல் லீயுடன் மோதினார்.

கொரோனா பாதித்த வீராங்கனைக்கு விளையாட அனுமதி.. காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் சர்ச்சை- முழு விவரம் கொரோனா பாதித்த வீராங்கனைக்கு விளையாட அனுமதி.. காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் சர்ச்சை- முழு விவரம்

காயம்

காயம்

பிவி சிந்து காமன்வெல்த் வரலாற்றில் இதுவரை 2014ஆம் ஆண்டு வெண்கலமும், 2018ஆம் ஆண்ட வெள்ளிப் பதக்கமும் வென்று இருக்கிறார். இந்த நிலையில், தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வெல்லும் வாய்ப்பு சிந்துவுக்கு கிடைத்தது. சிந்துவுக்கு காலில் லேசான தசைப் பிடிப்பு ஏற்பட்டது. எனினும் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் விளையாடினார்.

அதிரடி

அதிரடி

தொடக்கம் முதலே அதிரடியாக பிவி சிந்து விளையாடினாலும், கனடா வீராங்கனையும் ஆட்டத்தின் சில நிமிடங்களில் சிந்துக்கு நெருக்கடி அளித்தார். ஸ்கோர் 5க்கு5 என சமனில் இருந்தது. எனினும் சிந்து தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றார். இதனால் சிந்துவுக்கும், கனடா வீராங்கனைக்குமான இடைவெளி அதிகமானது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

முதல் செட்டில் தொடர்ந்து இரு வீராங்கனைகளும் 30 சாட் ரெலி அடித்தனர். இறுதியில் சிந்து முதல் செட்டை 21க்கு15 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனையடுத்து 2வது செட்டில் சிந்து மோதினார். அதிலும் தொடக்கம் முதலே சிந்துவின் கையே ஓங்கி இருந்தது. இதில் சிந்து, ஒரு முறை கூட கனடா வீராங்கனை தன்னை விட அதிக புள்ளிகளை பெற வாய்ப்பே தரவில்லை.

சிந்து சாதனை

சிந்து சாதனை

தொடர்ந்து சிந்து புள்ளிகளின் இடைவெளியை அதிகப்படுத்தியே வந்தார். குறிப்பாக 13வது புள்ளியை பெற, தொடர்ந்து 57 முறை விடாமல் அடிக்க, சிந்து அந்த ரெலியை வென்றார். அதனையடுத்து 2வது செட்டை 21க்கு 13 என்ற கணக்கில் பிவி சிந்து வெல்ல, முதல் முறையாக காமன்வெல்த் தங்கப் பதக்கத்தை வென்றார். உலக சாம்பியன் பட்டம், ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கத்தை வென்றுள்ள சிந்து, தற்போது காமன்வெல்த்தில் 3 பதக்கத்தையும் வென்று இருக்கிறார்.

Story first published: Tuesday, August 9, 2022, 18:59 [IST]
Other articles published on Aug 9, 2022
English summary
2022 Commonwealth games – PV Sindhu won maiden gold in badminton காமன்வெல்த் வரலாற்றில் இந்தியா சாதனை.. பிவி சிந்துவுக்கு முதல் தங்கம்.. 4வது இடத்தை பிடித்த இந்தியா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X