For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தாரா..? பிவி சிந்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. உண்மையான சாம்பியன்

ஐதராபாத் : இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து கடினமான கஷ்டத்தையும் மீறி காமன்வெல்த்தின் தங்கப்பதக்கம் என்று சாதனை படைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையும் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

எனினும் துரதரிஷ்டம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன் தொடரிலிருந்து தாம் விலகுவதாக பிவி சிந்து குறிப்பிட்டுள்ளார்.

Badminton star PV Sindhu reveals she Played with injury in CWG Finals

காமன்வெல்த் தொடரில் விளையாடும் போது கால் இறுதி சுற்றில் தமக்கு காயம் ஏற்பட்டதாகவும், அப்போது வலியால் துடித்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் பதக்கம் வென்றே தீர வேண்டும் என்ற முயற்சியோடு தான் தொடர்ந்து விளையாடினேன் முடிந்த அளவு முயற்சி செய்தேன்.

காமன்வெல்த் வரலாற்றில் இந்தியா சாதனை.. பிவி சிந்துவுக்கு முதல் தங்கம்.. 4வது இடத்தை பிடித்த இந்தியாகாமன்வெல்த் வரலாற்றில் இந்தியா சாதனை.. பிவி சிந்துவுக்கு முதல் தங்கம்.. 4வது இடத்தை பிடித்த இந்தியா

அதற்கு என்னுடைய பயிற்சியாளர்கள் உறுதுணையாக இருந்தார்கள் என்று கூறினார். காமன்வெல்த் தொடரின் இறுதி போட்டியில் தம்மால் தாங்க முடியாத அளவுக்கு வலி இருந்ததாக குறிப்பிட்ட அவர் போட்டி முடிந்து ஹைதராபாத் சென்று உடனடியாக மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டேன்.

அதில் தமது இடது காலில் பிராக்சர் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்று சிந்து குறிப்பிட்டுள்ளார். இதனால் சில வாரம் ஓய்வில் இருக்க தாம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சிந்து சிறிது காலத்தில் மீண்டும் பயிற்சி தொடங்க இருப்பதாக கூறியுள்ளார்.

Story first published: Sunday, August 14, 2022, 10:07 [IST]
Other articles published on Aug 14, 2022
English summary
Badminton star PV Sindhu reveals she Played with injury in CWG Finalsஇவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தாரா..? பிவி சிந்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. உண்மையான சாம்பியன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X