For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"சென்னை ஸ்மேஷர்ஸ்" கலகல.. லுங்கி டான்சில் பின்னி எடுத்த பிவி சிந்து.. கூடமாட ஆடிய விஜயகாந்த் மகன்!

பிரிமியர் பேட்மின்டன் லீக்கில் பங்கேற்கும் சென்னை ஸ்மேஷர்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழாவில் பி.வி.சிந்து, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் லுங்கி டான்ஸ் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

By Gajalakshmi

சென்னை : ஜனவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ள பிரிமீயர் பேட்மின்டன் லீக்கில் பங்கேற்கும் சென்னை ஸ்மேஷர்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேட்மின்டன் வீராங்கணை பி.வி.சிந்து மற்றும் அணியின் உரிமையாளரும் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகர் ஆடிய லங்கி டான்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

கிரிக்கெட்டி விளையாட்டில் நடத்தப்படும் ஐபிஎஸ் போட்டிகளைப் போல பேட்மின்டனிலும் பிரிமீயர் பேட்மின்டன் லீக் நடத்தப்படுகிறது. இதன் 3வது தொடரானது டிசம்பர் 23ம் தேதி தொடங்கி ஜனவரி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பேட்மின்டன் பிரிமீயர் லீக்கி ஆண்டு தோறும் கேப்டன் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனின் சென்னை ஸ்மேஷர்ஸ் அணி பங்கேற்று வருகிறது.

இவரது அணியில் பி.வி. சிந்து, கிறிஸ் அட்ஹாக், கேபி அட்ஹாக் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பிரீமியர் பேட்மின்டன் லீக் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் சென்னை ஸ்மேஷர்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா சென்னை ஃபோரம் மாலில் நேற்று நடந்தது.

மேடைக்கு வந்த விஜய பிரபாகர்

மேடைக்கு வந்த விஜய பிரபாகர்

இந்த நிகழ்ச்சியில் பி.வி.சிந்து, கிறிஸ் அட்காக் உள்ளிட்டோர் மேடையில் இருக்கும் போது விஜயபிரபாகர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். அப்போது வீரர்களுடன் சேர்ந்து லுங்கி நடனம் ஆட நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க, பி.வி.சிந்து விஜய பிரபாகரிடம் வேஷ்டியை கொடுத்து அதனை கட்டிக் கொண்டு ஆடுமாறு கோரிக்கை விடுக்கிறார்.

சிந்து அசத்தல் நடனம்

சிந்து அசத்தல் நடனம்

இதனையடுத்து விஜயபிரபாகர் மற்றும் பி.வி. சிந்து இருவரும் லுங்கி அணிந்து கொண்டு லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ் நடனமாடினார்கள். இந்த கல கல நிகழ்ச்சியில் சொல்லப்போனால் விஜய பிரபாகரை விட பி.வி.சிந்து சிறப்பாக ஆடி அசத்தினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சி போல

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சி போல

சிந்து, விஜய பிரபாகரின் நடனம் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது, சென்னை ஸ்மேஷர்ஸ் அணியின் ஜெர்சியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி போலவே மஞ்சள் நிறத்தில் சிங்க லோகோவை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை ஸ்மேஷசர்ஸ் அணி சென்னையில் விளையாட முடியாமல் போன நிலையில் இந்த ஆண்டு இந்த அணியின் விளையாட்டை சென்னை ரசிகர்கள் பார்த்து மகிழ வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோப்பை உறுதி

கடந்த ஆண்டு சென்னை ஸ்மேஷர்ஸ் அணி பிரிமீயர் பேட்மின்டன் லீக்கில் கோப்பையை வென்றிருந்தது. இதே போன்று இந்த ஆண்டும் கோப்பையை வெல்வோம் என்று உறுதியோடு இருப்பதாக அணியின் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, December 22, 2017, 14:09 [IST]
Other articles published on Dec 22, 2017
English summary
Chennai Smashers team Jersy introduction turns smart moment because of P.V.Sindhu and Vijayakanth's son vijaya Prabhakar Lungi dance
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X