For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விமல்குமாரிடம் பயிற்சி பெற சாய்னா நேவாலை வற்புறுத்தவில்லை -பிரகாஷ் படுகோன் அகாடமி

பெங்களூரு : விமல்குமாரின்கீழ் பயிற்சி பெற சாய்னா நேவாலை வற்புறுத்தவில்லை என்று பிரகாஷ் படுகோன் பேட்மிண்டன் அகாடமி விளக்கம் அளித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக கோபிசந்த் என்ற பயிற்சியாளரின் கீழ் ஐதராபாத்தில் பயிற்சி பெற்றுவந்த சாய்னா நேவால் தற்போது பெங்களூருவில் படுகோன் அகாடமியின் விமல்குமார் என்பவரின்கீழ் பயிற்சி பெற்று வருகிறார்.

அவர் தன்னிடம் இருந்து விலகி விமல்குமாரிடம் பயிற்சி பெறுவதற்கு பிரகாஷ் படுகோன் பேட்மிண்டன் அகாடமியே காரணம் என்று கோபிசந்த் வருத்தம் தெரிவித்திருந்தார்.

கோபிசந்திடம் பயிற்சி பெற்ற சாய்னா

கோபிசந்திடம் பயிற்சி பெற்ற சாய்னா

பல ஆண்டுகளாக ஐதராபாத்தில் கோபிசந்த் என்ற பயிற்சியாளரிடம் சாய்னா நேவால் பயிற்சி பெற்று வந்தார். சர்வதேச அளவில் அவர் பல சாதனைகளை மேற்கொள்ள கோபிசந்தே காரணம் என்று கூறப்படுகிறது.

விமல்குமாரிடம் பயிற்சிபெறும் சாய்னா

விமல்குமாரிடம் பயிற்சிபெறும் சாய்னா

இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்சை முன்னிட்டு ஐதராபாத்தின் கோபிசந்த் அகாடமியில் இருந்து பெங்களூருவில் விமல்குமாரிடம் பயிற்சி பெற சாய்னா நேவால் சென்றுள்ளார்.

கோபிசந்த் வருத்தம்

கோபிசந்த் வருத்தம்

இந்நிலையில் 'டிரீம்ஸ் ஆப் எ பில்லியன் : இந்தியா மற்றும் ஒலிம்பிக் போட்டிகள்' என்ற தனது புத்தகத்தில், தன்னிடம் இருந்து விலகி, சாய்னா நேவால் படுகோன் அகாடமியில் சேர்ந்தது குறித்து கோபிசந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கோபிசந்த் குற்றச்சாட்டு

கோபிசந்த் குற்றச்சாட்டு

சாய்னா நேவாலின் இந்த முடிவுக்கு பிரகாஷ் படுகோன் பேட்மிண்டன் அகாடமி, விமல்குமார் மற்றும் ஒலிம்பிக் கோல்டு க்வெஸ்ட் அதிகாரி வீரன் ரஸ்கின்ஹா போன்றோரே காரணம் என்று தனது புத்தகத்தில் கோபிசந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

படுகோன் அகாடமி விளக்கம்

படுகோன் அகாடமி விளக்கம்

இந்நிலையில் கோபிசந்த்தின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள பிரகாஷ் படுகோன் அகாடமி, விளையாட்டு வீரராகவும் பயிற்சியாளராகவும் கோபிசந்தின் திறமையை மதிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

யாரையும் கட்டாயப் படுத்துவதில்லை

யாரையும் கட்டாயப் படுத்துவதில்லை

விமல்குமாரின்கிழ் பயிற்சி பெறுவது சாய்னாவின் சொந்த முடிவு என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ள பிரகாஷ் படுகோன் அகாடமி, பயிற்சிகள் குறித்து யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை என்றும் கூறியுள்ளது.

2001ல் ஆல் இங்கிலாந்து சாம்பியன்

2001ல் ஆல் இங்கிலாந்து சாம்பியன்

கடந்த 2001ல் ஆல் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் பெற்றுள்ள கோபிசந்த் அதற்கு முன்னதாக பிரகாஷ் படுகோன் அகாடமியில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 14, 2020, 18:48 [IST]
Other articles published on Jan 14, 2020
English summary
Prakash Padukone Academy did not force Saina Nehwal to train under Vimal Kumar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X