For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியான்னா சும்மா கிடையாது..!! 10 பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் கதை..

ஸ்பெயின்: இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பிறகு தற்போது வளர்ந்து வரும் விளையாட்டாக பேட்மிண்டன் உள்ளது.

பேட்மிண்டன் விளையாட்டில் மிகப் பெரிய தொடராக பார்க்கப்படுவது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷியர் தொடர் ஆகும். இம்முறை இந்த தொடர் ஸ்பெயினில் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது.

அப்படி பெருமைமிக்க தொடரில் இந்தியா இதுவரை வென்ற பதக்கங்களை தற்போது காணலாம்..

டிராவிட் - பிசிசிஐ இடையே கருத்து வேறுபாடு? 2 சீனியர்களால் வந்த பிரச்னை.. அணித்தேர்வில் குழப்பம்! டிராவிட் - பிசிசிஐ இடையே கருத்து வேறுபாடு? 2 சீனியர்களால் வந்த பிரச்னை.. அணித்தேர்வில் குழப்பம்!

1983

1983

1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பிரகாஷ் படுகோனே அரையிறுதி வரை முன்னேறினார். அரையிறுதியில் இந்தோனேஷிய வீரரை எதிர்கொண்ட அவர், தோல்வியை தழுவினார். இதன் மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்த தொடரின் வரலாற்றிலேயே இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்

2011

2011

2011ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அஸ்வினி பொனப்பா, ஜூவாலா கட் ஜோடி சீன இணையிடம் அரையிறுதியில் தோற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது. இது 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வென்ற இரண்டாவது பதக்கம் ஆகும்

பி.வி.சிந்து

பி.வி.சிந்து

2013ஆம் ஆண்டு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதே போன்று 2014ஆம் ஆண்டும் பி.வி. சிந்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.இதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஒக்குஹாராவிடம் இறுதிப் போட்டியில் போராடி தோற்ற சிந்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். 2018ஆம் ஆண்டிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, 2019ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்று, இந்த தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

சாய்னா நேவால்

சாய்னா நேவால்

2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாய்னா நேவால் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சாய்னா படைத்தார். இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் சாய்னா நேவாலுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.இதே போன்று 2019ஆம் ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனித்துக்கு வெண்கலம் கிடைத்தது.

Story first published: Friday, December 10, 2021, 22:43 [IST]
Other articles published on Dec 10, 2021
English summary
World badminton championship2021is going to happen in spain from Dec 12. Lets see the India Performance in the Marque event. PV Sindhu Won record 5 Medals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X