என்னாச்சு பி.வி..சிந்துவுக்கு..? இப்படி ஒரு சோகத்தை எதிர்பார்க்காத ரசிகர்கள்..?

இந்தியாவின் தலைச்சிறந்த பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் பி.வி.சிந்து, 2 முறை ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற பி.வி.சிந்து இப்படி ஒரு சோகத்தை என்றும் அனுபவித்திருக்க மாட்டார்.

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் களமிறங்கிய சிந்து காலிறுதி போட்டியில் எளிதில் வென்றார்.

பழைய பார்ம்க்கு சிந்து திரும்பிவிட்டார் என ரசிகர்களும் ஆர்வமாக இருந்தனர். இதனால் இந்தோனேஷிய மாஸ்ட்ர்ஸ் பட்டம் சிந்துவிற்கு தான் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சிந்துவுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

“ஓப்பனிங் சிறப்பு.. ஃபினிஷிங் மோசம்”.. பெட்டி பாம்பாய் அடங்கிய நியூஸி,.. ஆட்டத்தை மாற்றிய 4 ஒவர்கள்!“ஓப்பனிங் சிறப்பு.. ஃபினிஷிங் மோசம்”.. பெட்டி பாம்பாய் அடங்கிய நியூஸி,.. ஆட்டத்தை மாற்றிய 4 ஒவர்கள்!

ஜப்பான் வீராங்கனை

ஜப்பான் வீராங்கனை

அரையிறுதியில் முன்னணி வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த யாமாகுச்சியை பி.வி.சிந்து எதிர்கொள்ள இருந்தார். இருவரும் இதுவரை 19 முறை மோதியுள்ளனர்.இதில் 12 முறை பி.வி.சிந்துவும், 7 முறை யாமாகுச்சியும் வெற்றி பெற்றனர். நடப்பாண்டில் மட்டும் 2 முறை யாமாகுச்சியை சிந்து வீழ்த்தியிருந்தார்.

அரையிறுதி

அரையிறுதி

ஜகார்டாவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் யாமாகுச்சியுடன் சிந்து மோதினார். இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யாமாகுச்சியின் அதிரடி ஆட்டம் சிந்துவை நிலைக்குலைய வைத்தது. இதனால் முதல் செட்டை 13க்கு21 என்ற கணக்கில் சிந்து இழந்தார்

தோல்வி

தோல்வி

சரி.. இரண்டாவது செட்டில் சிந்து அதிரடியை காட்டுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சிந்துவின் ஆட்டம் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால், சிந்துவின் இரண்டாவது செட்டை பார்த்த ரசிகர்கள், இதற்கு முதல் செட் ஆட்டமே பரவாயில்லை என நினைக்க தொடங்கினர். இரண்டாவது செட்டை சிந்து 9க்கு21 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். மொத்தம் இந்த ஆட்டம் தமிழ் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கு இடையே ஒளிபரப்பப்படும் சீரியல் அளவே நீடித்தது (32 நிமிடம்),இந்த தோல்வியை சிந்துவே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த்

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் போட்டியில் தற்போது ஸ்ரீகாந்த் கிடாம்பியை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர். ஸ்ரீகாந்த் கிடாம்பி அரையிறுதியில் டென்மார்க் வீரர் ஆண்டர்ஸை எதிர்கொள்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian Ace shuttler PV Sindhu crashed out of Indonesian Masters, In Semifinal, She lost to the top seeded Japanese Yamaguchi in straight sets
Story first published: Saturday, November 20, 2021, 16:47 [IST]
Other articles published on Nov 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X