சிபாரிசு கடிதம் இருந்தால்தான் பத்ம விருதா? ஜூவாலா கட்டா கொந்தளிப்பு

By Kalai Mathi

டெல்லி: பத்ம விருதுகள் பட்டியலில் தனது பெயல் இடம்பெறாதது குறித்து பேட்மிண்டன் வீராங்கணை ஜூவாலா கட்டா அதிப்ருதி தெரிவித்துள்ளார். உரிய தகுதிகள் இருந்தும் தான் ஏன் சிபாரிசு கடிதத்தை தேடிச் செல்ல வேண்டும் என்றும் அவர் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பேட்மிண்டன் வீராங்கணையான ஜூவாலா கட்டா மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர். ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

இந்தியாவுக்காக பேட்மிண்டன் போட்டிகளை விளையாடி வரும் இவர் ஆசியப் போட்டி உட்பட ஏராளமான போட்டிகளில் பதங்கங்களை குவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்து பத்ம விருதுகள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. அதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஜூவாலா கட்டா கருத்து தெரிவித்துள்ளார்.

முதல் வீராங்கனை நான்தான்

முதல் வீராங்கனை நான்தான்

அதில் இதுவரை தாம் 15 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். இந்திய வரலாற்றிலேயே ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பிரிவில் கலந்துகொண்டு விளையாடிய முதல் வீராங்கனை தான்.

சிபாரிசு கடிதம்தான் வேண்டுமா?

பத்மவிருதுகளுக்கு தம்மை தேர்வு செய்ய, போட்டிகளில் விளையாடி இதுவரை தான் வாங்கிய பதக்கங்கள் போதாதா? உரிய தகுதிகள் இருந்தும் சிபாரிசுகளை தேடி தான் ஏன் செல்ல வேண்டும்?

ஸ்னூக்கர் வீரர் அதிருப்தி

இதனிடையே, ஸ்னூக்கர் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானியும், பத்ம பூசன் விருதுக்கு தாம் தேர்வு செய்யப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலுக்கு ட்வீட் செய்துள்ளார்.

வேற என்ன செய்ய வேண்டும்

வேற என்ன செய்ய வேண்டும்

அதில் இதுவதை 16 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 முறை தங்கப்பதக்கங்களையும் பெற்றுள்ளேன். பத்ம பூசன் விருதுக்கு இதைவிட மேலாக இன்னும் என்ன செய்ய வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Jwala Gutta questioned the criteria for selecting recipients of the Padma Awards, the country's highest civilian awards, after being left out among the various other sports persons in the list announced on Wednesday.
Story first published: Friday, January 27, 2017, 9:23 [IST]
Other articles published on Jan 27, 2017
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X