For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முழங்காலில் காயம்.. ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து விலகினார் ஜூவாலா!

டெல்லி: இந்திய பேட்மிண்டன் புயல்களில் ஒருவரான ஜூவாலா கட்டா முழங்கால் காயம் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இரட்டையர் பிரிவில் ஆடி வருபவர் ஜூவாலா. தற்போது அவர் ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் இந்திய பேட்மிண்டன் அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

வெண்கலம் வென்றவர்

வெண்கலம் வென்றவர்

உபேர் கோப்பைப் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற அஸ்வினி பொன்னப்பா - ஜூவாலா ஜோடி மீது ஆசிய விளையட்டுப் போட்டியிலும் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

2 வார ஓய்வுக்குப் பரிந்துரை

2 வார ஓய்வுக்குப் பரிந்துரை

இந்த நிலையில்தான் முழங்காலில் காயம் ஏற்பட்டு விட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர், 2 வார ஓய்வைப் பரிந்துரைத்துள்ளதால், ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ஜூவாலா.

வலிக்குது...

வலிக்குது...

ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டபோது எனக்கு வலித்தது. தொடர்ந்து ஆட முடியவில்லை. டாக்டரிடம் காலைக் காட்டி பரிசோதித்தேன். அவர் 2 வாரம் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறி விட்டார். இதனால் விளையாட முடியாத நிலை என்று கூறியுள்ளார் ஜூவாலா.

எனக்கு இது புதுசு

எனக்கு இது புதுசு

மேலும் அவர் கூறுகையில், கால் நன்றாக வீங்கியுள்ளது. நான் இதுவரை காயம் காரணமாக எந்தப் போட்டியிலிருந்தும் விலகியதில்லை. இப்போதுதான் முதல் முறையாக இப்படி நடந்துள்ளது. எனக்கே இது வினோதமாக உள்ளது என்றார் ஜூவாலா.

காமன்வெல்த்தில் அசத்தியவர்

காமன்வெல்த்தில் அசத்தியவர்

2010 காமன்வெல்த் போட்டியில் தங்கமும், 2014 காமன்வெல்த்தில் வெள்ளியும் பெற்றவர் ஜூவாலா.

17வது ஆசிய போட்டி

17வது ஆசிய போட்டி

செப்டம்பர் 19ம் தேதி 17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன. அக்டோபர் 4ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

இந்தியாவிலிருந்து 679 பேர்

இந்தியாவிலிருந்து 679 பேர்

இந்தியாவிலிருந்து 679 வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர். 28 போட்டிகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

அடுத்த வருஷம் விளையாடுவேன்

அடுத்த வருஷம் விளையாடுவேன்

"கால் வீக்கம் படிப்படியாக குறைகிறது. இப்போது ரிஸ்க் எடுத்தால் வெயிட் முழங்காலில் இறங்கி மோசமாகி விடும். எனக்கும் 31 வயதாகிறது. அதையும் பார்க்க வேண்டும். அடுத்த வருடம் நிச்சயம் நான் போட்டிகளில் ஆட ஆரம்பித்து விடுவேன் என்றார் ஜூவாலா.

காலைப் பாத்துக்குங்க ஜூவாலா...!

Story first published: Wednesday, September 10, 2014, 17:36 [IST]
Other articles published on Sep 10, 2014
English summary
Ace Indian women’s doubles player Jwala Gutta has pulled out of the prestigious Asian Games after sustaining a sprain in the right knee ahead of the multi-sport event in Incheon, South Korea. One half of the World Championship bronze medallist pair, Jwala developed a pain in her right knee and decided to consult doctor, who advised her complete rest for the next two weeks, forcing her to miss the Asian Games.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X