For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்தா கெட்டுப் போக மாட்டோம்.. சொல்கிறார் ஜுவாலா கட்டா

ஹைதராபாத்: மத்திய அரசின் காஸ் மானியத்தை வி்ட்டுக் கொடுக்கும் திட்டத்திற்கு சர்ச்சைக்குரிய பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் ஜுவாலா. இந்தத் திட்டம் நல்ல திட்டம் என்றும் அவர் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார்.

இந்த கோரிக்கையை விடுப்பதற்கு முன்பு தனது வீட்டில் காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஜுவாலா அளித்துள்ள பேட்டி:

வாங்க, வந்து விட்டுக் கொடுங்க

வாங்க, வந்து விட்டுக் கொடுங்க

மக்கள் இந்தத் திட்டத்திற்கு தாங்களாக முன்வந்து விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும். அப்போதுதான் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் சம நிலையை எட்ட முடியும்.

புகையைக் குறைக்கலாம்

புகையைக் குறைக்கலாம்

மேலும் அனைவருக்கும் சிலிண்டர் கிடைக்கவும் இது உதவி செய்யும். இதனால் மரம், கட்டை, கெரசின், கரி ஆகியவற்றால் எரியும் அடுப்புகளின் எண்ணிக்கை குறைந்து சுற்றுச்சூழல் மாசும் குறையும்.

மக்களுக்கு சுகாதாரத்தைக் கொடுப்போம்

மக்களுக்கு சுகாதாரத்தைக் கொடுப்போம்

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 13 கோடி பேர் இன்னும் பாரம்பரிய முறையிலான அடுப்பையே பயன்படுத்துகிறார்கள். இதனால் வீடுகள் மாசுபடுகின்றன. சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. பெண்கள், குழந்தைகள் புகையால் பாதிக்கப்படுகிறார்கள்.

புகை மாசால் மரணம்

புகை மாசால் மரணம்

புகை மாசால் பெருமளவில் இறப்புகளும் நேரிடுகின்றன. பலர் இந்த புகை மாசால் உயிரிழப்பது வருத்தம் தருகிறது. இதையெல்லாம் நாம் நிறுத்தியாக வேண்டும் என்றார் ஜுவாலா.

Story first published: Wednesday, July 22, 2015, 13:23 [IST]
Other articles published on Jul 22, 2015
English summary
Ace Badminton player Jwala Gutta has extended her support to the 'give it up' campaign.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X