சிறந்த மனைவி.. அற்புதமான பெண்.. சாய்னாவை புகழ்ந்த கணவர்.. திருமண நாளை கொண்டாடிய பேட்மிண்டன் ஜோடி!

பேட்மின்டன் வீரர்கள் சாய்னா நேவால் மற்றும் பருப்பள்ளி காஷ்யாப் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அவர்களது முதல் திருமண நாளை கொண்டாடிவருகின்றனர்.

முதல் திருமண நாளையொட்டி இருவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

முதலில் வாழ்த்துக்களை பகிர்ந்த காஷ்யாப், உலகிலேயே மிகவும் அற்புதமான பெண் சாய்னா நேவால் என்றும் அவரை விட்டு மற்றொரு பெண்ணை மனைவியாக நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

2018 டிசம்பர் 14ல் திருமணம்

2018 டிசம்பர் 14ல் திருமணம்

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா மற்றும் வீரர் பருப்பள்ளி காஷ்யாப் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

வாழ்த்துக்களை பகிர்ந்த ஜோடி

வாழ்த்துக்களை பகிர்ந்த ஜோடி

இந்நிலையில் தங்களது முதல் ஆண்டு திருமண தினத்தை சாய்னா - காஷ்யாப் ஜோடி தற்போது கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்த இவர்கள், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

"உலகிலேயே மிகவும் அற்புதமான பெண்"

முதலில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களுடன் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்ட காஷ்யாப், உலகிலேயே மிகவும் அற்புதமான பெண் சாய்னா என்று பெருமிதம் தெரிவித்தார்.

சாய்னாவை விட சிறப்பானவர் இல்லை

தன்னுடைய முதல் திருமண நாளை சிறப்பாக்கிய சாய்னா நேவாலுக்கு நன்றி தெரிவித்த காஷ்யாப், இதை விட சிறந்த மனைவியை கேட்கவில்லை என்றும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

சாய்னாவும் வாழ்த்து

சாய்னாவும் தன்னுடைய முதல் திருமண நாளையொட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

சாய்னாவின் சாதனை

சாய்னாவின் சாதனை

கடந்த 2012ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பாட்மின்டனில் இந்தியா சார்பில் விளையாடிய சாய்னா நேவால் வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பாட்மின்டனில் இந்தியா தனது முதல் பதக்கத்தை கைவசப்படுத்தியது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Saina nehwal -Parupalli Kashyap's first year Anniversary celebrations
Story first published: Wednesday, December 18, 2019, 12:15 [IST]
Other articles published on Dec 18, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X