பாட்டுப் பாடவா? வைரலான காஷ்யாப்பின் பாட்டு... பதிவிட்ட சாய்னா நேவால்

ஐதராபாத் : பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தன்னுடைய கணவர் காஷ்யாப் பாட்டு பாடும் வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு அதற்கு அவருடைய ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர்.

பாலிவுட்டின் தி டர்ட்டி பிக்சர் என்ற படத்திலிருந்து மிகவும் பிரபலமான பாடல் ஒன்றை காஷ்யாப் பாடியுள்ளார். அவரின் குரல்வளம் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17ம் தேதி சாய்னா நேவால் மற்றும் அவரது கணவர் பருப்பள்ளி காஷ்யாப் இருவரும் தங்களது முதல் ஆண்டு திருமண விழாவை கொண்டாடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

முதலாண்டு திருமண விழா

முதலாண்டு திருமண விழா

பேட்மிண்டன் தம்பதிகளான சாய்னா நேவால் மற்றும் அவரது கணவர் பருப்பள்ளி காஷ்யாப் இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். கடந்த 17ம் தேதி தங்களது முதலாண்டு திருமண விழாவை கொண்டாடி இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.

கணவரின் வீடியோவை பகிர்ந்த சாய்னா

தி டர்ட்டி பிக்சர் என்ற பாலிவுட் படத்திலிருந்து தன்னுடைய கணவர் காஷ்யாப் பாடிய பாடலை சாய்னா நேவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு

இதையடுத்து இந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து, லைக்குகளை அளித்தும் பகிர்ந்தும் உள்ளனர். மேலும் காஷ்யாப்பின் குரல்வளம் சிறப்பாக உள்ளதாகவும் பாராட்டியுள்ளனர்.

காயங்களால் அவதி

காயங்களால் அவதி

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் கரோலினா மரீனை வெற்றி கொண்டு இந்த ஆண்டை வெற்றியுடன் துவக்கிய சாய்னா, தொடர் காயங்கள் காரணமாக, மற்ற போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது பேட்மிண்டன் பிரீமியர் லீக்கின் அடுத்த சீசனுக்காக தன்னை அவர் தயார் படுத்தி வருகிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Saina Nehwal posts a video of her Husband Singing a Bollywood Song
Story first published: Monday, December 30, 2019, 11:21 [IST]
Other articles published on Dec 30, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X