For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோவில் பதக்கம் வென்று சாதிப்பேன்... ஜூவாலா கட்டா உற்சாகம்

By Mayura Akilan

ரியோ: ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதிப்பேன் என பாட்மிண்டன் வீராங்கனை ஜூவாலாகட்டா தெரிவித்துள்ளார். பாட்மின்டனில் சமீபத்திய போட்டிகளில் எழுச்சி பெற்றுள்ள செய்னா நேவல் பதக்கம் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசிலின் ரியோவில் இன்றுமுதல் முதல் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து முதல் முறையாக 120 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வீரர்கள் பங்கு பெற உள்ளனர். அதனால் இந்தியா பெறும் பதக்கங்களின் எண்ணிக்கை முன்பை விட இரு மடங்காக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒலிம்பிக் பதக்கங்கள்

ஒலிம்பிக் பதக்கங்கள்

உலகளாவிய நிதி நிறுவனமான ‘கோல்டு சாச்' ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக்கும், பொருளாதாரமும் என்ற தலைப்பில் ஒவ்வொரு நாடும் ஒலிம்பிக்கில் எவ்வளவு பதக்கம் பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்பட எட்டு பதக்கங்கள் கிடைக்கும் என கணித்துள்ளது.

இந்தியாவிற்கு தங்கம்

இந்தியாவிற்கு தங்கம்

இதே நிறுவனம் லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம் உள்பட ஐந்து பதக்கங்கள் கிடைக்கும் கணித்திருந்தது. ஆனால், கடந்த ஒலிம்பிக்கில் இந்தியா இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் ஆக மொத்தம் ஆறு பதக்கங்கள் பெற்று இருந்தது.

இந்த தொடரில் எட்டு பதக்கங்கள் என கணித்துள்ளது.

பாட்மிட்டன் பிரிவு

பாட்மின்டன் பிரிவில் 7 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜூவாலா, அஷ்வினி ஜோடி பங்கேற்கிறது. இது குறித்து ஜூவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவுக்காக ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது முழுத்திறமையை வெளிப்படுத்துவேன்.,' என அதில் குறிப்பிட்டிருந்தார்.

அஸ்வினி பொன்னப்பா

பாட்மின்டனில் சமீபத்திய போட்டிகளில் எழுச்சி பெற்றுள்ள செய்னா நேவல் பதக்கம் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்மிட்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பாவும் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து உற்சாக போஸ் கொடுத்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் பதக்க நம்பிக்கை

இந்தியாவின் பதக்க நம்பிக்கை

இதுவரை 30 ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து விட்டன. இதில் 9 தங்கம், 6 வெள்ளி, 11 வெண்கலம் என, ஒட்டுமொத்தமாக இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 26 தான். இம்முறை இரட்டை இலக்க அளவில் பதக்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Story first published: Friday, August 5, 2016, 9:17 [IST]
Other articles published on Aug 5, 2016
English summary
Indian women's doubles shuttler Jwala Gutta assured on Thursday that she and her partner Ashwini Ponnappa will give their best at the upcoming Summer Olympics and will be aiming for a podium finish.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X