தெற்காசிய விளையாட்டு போட்டிகள் : பேட்மின்டன் போட்டியில் 2 தங்கம் வென்றது இந்தியா!

பொகாரா : 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பேட்மின்டன் ஆடவர் மற்றும் மகளிர்குழு பிரிவில் இலங்கையை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 2 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தலைமையில் களமிறங்கிய இந்திய வீரர்கள், இலங்கையை 3க்கு 1 என்ற செட் கணக்கில் தோற்கடித்தனர். இதேபோல மகளிர் பிரிவில் 3க்கு 0 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனைகள் இலங்கையை ஓட அடித்தனர்.

தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 487 வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இதுவரை இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 3 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 நேபாளத்தில் நடைபெறுகிறது

நேபாளத்தில் நடைபெறுகிறது

13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேபாளத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் 15க்கும் மேற்பட்ட பிரிவகளில் 487 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

 ஆடவர், மகளிர் பிரிவில் சாதனை

ஆடவர், மகளிர் பிரிவில் சாதனை

இதில் பேட்மின்டன் பிரிவில் இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இரண்டு தங்கத்தை வெற்றி கொண்டு சாதனை புரிந்துள்ளனர்.

 3க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி

3க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி

இதில் ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தலைமையில் போட்டியிட்ட இந்திய ஆடவர் அணியினர் 3க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை தங்களுக்குரியதாக்கி உள்ளனர்.

 3க்கு 0 என்ற செட் கணக்கில் வெற்றி

3க்கு 0 என்ற செட் கணக்கில் வெற்றி

இதேபோல இலங்கை அணியை எதிர்த்து போட்டி கண்ட இந்திய மகளிர் அணியினர், 3க்கு 0 என்ற செட் கணக்கில் வெற்றி கொண்டு மற்றொரு தங்கத்தை வெற்றி கொண்டுள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் பதக்க பட்டியலில் மேலும் 2 தங்கப்பதக்கங்கள் சேர்ந்துள்ளன.

 இன்று நடைபெறுகின்றன

இன்று நடைபெறுகின்றன

தனிநபர் பேட்மின்டன் போட்டிகள் நேபாளத்தில் இன்று நடைபெறுகின்றன. இதனிடையே, டேக்வாண்டோவிலும் இந்தியா இரண்டு தங்கத்தை வெற்றி கொண்டுள்ளது.

 5 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம்

5 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம்

தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 3 வெண்கலங்களுடன் 16 பதக்கங்களை பெற்று இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian Badminton teams wins 2 gold medals in South Asian Games
Story first published: Tuesday, December 3, 2019, 11:07 [IST]
Other articles published on Dec 3, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X