For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிவி சிந்துக்கு அநியாயம்.. நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிந்து.. வீடியோ இதோ

மணிலா: ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் பிலிப்பைன்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை யமுகாச்சியும், பிவி சிந்துவும் மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடுவர்கள் செய்த தவறால் பெரும் சர்ச்சை உருவானது.

இந்தப் போட்டியில் முதல் செட்டை பிவி சிந்து 21க்கு 13 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

2வது செட்டில் பிவி சிந்து, 14க்கு 11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது பிவி சிந்து சர்வீஸ் செய்ய தாமதப்படுத்திவிட்டதாக கூறி, யமுகாச்சிக்கு நடுவர் புள்ளி வழங்கிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிந்து, நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Watch the video Conntroversial decision by umpire and PV Sindhu arguing with official

நிலைமை கொஞ்சம் சீரியஸ் ஆக, போட்டி நடுவர் மைதானத்துக்கு வந்து சிந்துவை சமாதானப்படுத்தினார். அப்போது யமுகாச்சி தயாராகவில்லை. அதனால் தான் தாம் சர்வீஸ் செய்யவில்லை, வேண்டும் என்றால் வீடியோவை ரீப்ளே செய்து பாருங்கள் என்று கூறினார்.

ஆனால், அதனை நடுவர் கேட்ட மாதிரி தெரியவில்லை. இதில் ஏற்பட்ட கவன சிதறலால், பிவி சிந்து இந்தப் போட்டியில் தோல்வியை தழுவினார். இதனையடுத்து பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடுவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியை பிவி சிந்து புறக்கணித்தார்.

Story first published: Monday, May 2, 2022, 15:21 [IST]
Other articles published on May 2, 2022
English summary
Watch the video Conntroversial decision by umpire and PV Sindhu arguing with official பிவி சிந்துக்கு அநியாயம்.. நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிந்து.. வீடியோ இதோ
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X