For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018இல் இந்திய பாட்மிண்டன் எப்படி? ஒரே ஒரு பட்டம் வென்ற சிந்து.. சறுக்கிய ஸ்ரீகாந்த்

டெல்லி : 2018இல் இந்திய பாட்மிண்டன் அரங்கை ஆட்சி செய்தது இரண்டு பெண்கள். ஒருவர் பி.வி.சிந்து மற்றொருவர் சாய்னா நேவால்.

இவர்கள் தவிர்த்து எராளமான வீரர்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் பாட்மிண்டன் அரங்கில் கோலோச்சினார்கள். கிடாம்பி ஸ்ரீகாந்த் மட்டுமே, முன்பு இருந்த இடத்தில் இருந்து சறுக்கியுள்ளார்.

இறுதிகளில் தோல்வி அடைந்த சிந்து

இறுதிகளில் தோல்வி அடைந்த சிந்து

இந்தியாவின் சார்பாக உலக பாட்மிண்டனை ஆட்சி செய்து வந்த சிந்து, இந்த ஆண்டு ஆறு இறுதிப் போட்டிகளில் பங்கேற்றார். இது நிச்சயம் பெரிய சாதனை தான். ஆனால், முதல் ஐந்து இறுதிப் போட்டிகளில் சிந்து தோல்வி அடையவே கடும் விமர்சனத்துக்கு ஆளானார். மற்றவர்கள் யாரும் இத்தனை இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறாத நிலையில், சிந்து இறுதி வரை முன்னேறி வெள்ளிப் பதக்கங்கள் வென்றதை பலரும் மறந்து விட்டனர். எனினும், ஆண்டு இறுதியில் வேர்ல்டு டூர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அசத்தினார். விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்தார்.

சாய்னா நேவால் அசத்தல்

சாய்னா நேவால் அசத்தல்

சாய்னா நேவால், காமன்வெல்த் தொடரின் இறுதியில் சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார். இந்தோனேசியா மாஸ்டர்ஸ், டென்மார்க் ஓபன், சையத் மோடி இன்டர்நேஷனல் ஆகிய தொடர்களின் இறுதிப் போட்டி வரை முன்னேறி வெள்ளி வென்றார். சிந்து அளவிற்கு பதக்கங்கள் வெல்லாவிட்டாலும், ஆண்டு இறுதியில் தன் பார்மை மீட்டுள்ளார். அதனால், அடுத்த ஆண்டில் மேலும் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கலாம். மேலும், கடந்த வாரம் தான் இவருக்கு மற்றொரு பாட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப்புடன் திருமணம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிடாம்பி ஸ்ரீகாந்த் சரிவு

கிடாம்பி ஸ்ரீகாந்த் சரிவு

ஆண்டு துவக்கத்தில் உச்சத்தில் இருந்த ஸ்ரீகாந்த், ஆண்டு முடிவில் சரிவை சந்தித்துள்ளார். காமன்வெல்த் தொடரில் ஒற்றையர் பிரிவில் வெள்ளி, அணிப் பிரிவில் தங்கம் என அசத்தலாக தொடங்கினார். தரவரிசையில் முதல் இடத்தில் நீண்ட நாட்கள் இருந்தார். எனினும், ஆண்டு முடிவில் எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ஸ்ரீகாந்த்.

இளம் வயது லக்ஷ்யா சென்

இளம் வயது லக்ஷ்யா சென்

17 வயதே ஆன லக்ஷ்யா சென் இந்திய பாட்மிண்டனின் அடுத்த தலைமுறை நட்சத்திர வீரராக அறியப்படுகிறார். இந்த ஆண்டு ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கம், யூத் ஒலிம்பிக்கில் வெள்ளி, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் என அசத்தினார்.

Story first published: Tuesday, December 25, 2018, 18:42 [IST]
Other articles published on Dec 25, 2018
English summary
Year ender 2018 - Indian Badminton growth in 2018 is phenomenal. PV Sindhu and Saina Nehwal won handful of titles like others.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X