வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்..! 2.5 கிமீ நீந்தி, போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற இளம் வீரர்

Nishan manohar kadam-வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்..! 2.5 கிமீ நீந்தி பதக்கம் வென்ற இளம் வீரர்-வீடியோ

பெங்களூரு: கர்நாடகாவில் கனமழையில் சிக்கிய இளம்வீரர் வெள்ள நீரில் நீந்தி சென்று குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார்.

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் வெள்ளநீர் கரை புரண்டு ஒடுகிறது. பல பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை. மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.

வெள்ள நீரில் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் பிலாகவி என்ற கிராமும் ஒன்று. அந்த கிராமத்தை சேர்ந்தவர் குத்துசண்டை வீரர் நிஷான் மனோகர். 19 வயதான இவர் பெங்களூருவில் நடைபெறும் மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

சூழ்ந்தது வெள்ள நீர்

சூழ்ந்தது வெள்ள நீர்

நிஷான் மனோகர் போட்டியில் கலந்து கொள்ள இருந்த நிலையில் கிராமத்தை முற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கிராமத்தில் இருந்து வெளியே செல்லும் 3 பாதைகளிலும் மழை நீர் வெளியேவில்லை. பெங்களூரு செல்ல ரயில் நிலையத்திற்கு சென்றால் தான் அங்கிருந்து போட்டி நடைபெறும் இடத்துக்கு சென்று சேர முடியும்.

2.5 கிமீ நீச்சல்

2.5 கிமீ நீச்சல்

எப்படியும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது நிசானிடம். உடனே அவரும், அவரது தந்தையும் 2.5 கி.மீ வெள்ள நீரில் நீந்தி சென்றுள்ளனர். அவர்களுக்கு தேவையான பொருட்களை பிளாஸ்டிக் கவரில் வைத்து எடுத்து கொண்டு சென்றுள்ளனர்.

காத்திருந்தேன்

காத்திருந்தேன்

இயற்கை இன்னல்களை கடந்து குத்து சண்டை போட்டியில் கலந்து கொண்ட நிசான் வெள்ளிபதக்கம் வென்று அசத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த குத்துசண்டை போட்டிக்காக நான் காத்திருந்தேன்.

நிச்சயம் வெல்வேன்

நிச்சயம் வெல்வேன்

இதை தவற விட நான் சற்றும் விரும்பவில்லை. ரயில்நிலையம் வந்து சேர எந்த போக்குவரத்து வசதி இல்லை. ஆகையால் நீந்தி வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த முறை தங்கத்தை தவறவிட்டு விட்டேன். அடுத்த முறை கண்டிப்பாக தங்கப்பதக்கம் வெல்வேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார்.

2 ஆண்டுகள் பயிற்சி

2 ஆண்டுகள் பயிற்சி

12 ம் வகுப்பு படிக்கும் நிசான், 2 ஆண்டுகளாக குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகிறார். நிசானும் அவரது தந்தையும் பகல் 3.45 மணிக்கு நீந்த துவங்கினர். மாலை 4.30 மணியளவில் சாலை பகுதியை சென்றடைந்தனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
A young boxer swims 2.5 km to attend event wins silver in Bangalore.
Story first published: Tuesday, August 13, 2019, 10:53 [IST]
Other articles published on Aug 13, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X