For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூரையை தொட்டா சிக்ஸ்! சின்னப் பசங்க ரூல்ஸ் மாதிரி இருக்கு.. குழப்பத்தில் வார்னே, ப்ரெட் லீ

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மெல்போர்ன் ரெனகேட்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மோதிய போட்டியில் பெர்த் அணி வீரர் அடித்த பந்து மேற்கூரையை தொட்டது. அதற்கு அம்பயர் சிக்ஸ் கொடுத்ததால் குழப்பமான சூழல் நிலவியது.

மேற்கூரை கொண்ட மைதானம்

மேற்கூரை கொண்ட மைதானம்

ஆஸ்திரேலியாவில் சில மைதானங்களில் மேற்கூரை உள்ளது. அதன் மூலம் மழை பெய்தாலும் போட்டியை தொடர்ந்து நடத்த முடியும். மெல்போர்ன் மைதானத்தில் மேற்கூரை உள்ளது. நேற்று போட்டியின் பொது பெர்த் அணி வீரர் ஆஷ்டன் டர்னர் பந்தை தூக்கி அடிக்க அது மேற்கூரை மீது பட்டது.

சிக்ஸ் வாய்ப்பே இல்லை

சிக்ஸ் வாய்ப்பே இல்லை

அந்த பந்தை பிடிக்க மூன்று மெல்போர்ன் அணி வீரர்கள் ஓடினர். ஒருவேளை பந்து மேற்கூரையை தொடாமல் இருந்து இருந்தால் அது கேட்ச் ஆகி இருக்க அதிக வாய்ப்பு இருந்தது. மேலும், அந்த பந்து மிக குறுகிய தூரம் மட்டுமே சென்றது. கூரையை தொடாத பட்சத்தில் அது சிக்ஸ் வரை சென்று இருக்க வாய்ப்பே இல்லை.

முன்னாள் வீரர்கள் அதிர்ச்சி

முன்னாள் வீரர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் அந்த பந்துக்கு சிக்ஸ் கொடுத்தார் அம்பயர். போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த பிரெட் லீ மற்றும் ஷேன் வார்னே இதை கண்டு குழப்பம் அடைந்தனர். கூரையை தொட்ட பந்து சிக்ஸ் தான் போகும் என எப்படி முடிவு செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பினர்.

இந்த விதி சரியல்ல

அதே போல அந்த பந்தை அடித்த ஆஷ்டன் டர்னரே இந்த விதி சரியானதல்ல என கூறியுள்ளார். மைதானத்தின் நடுவில் அந்தரத்தில் தொங்கும் ஸ்பைடர்கேம் மீது பந்து பட்டால் அது டெட் பால் என்ற விதி சர்வதேச போட்டிகளில் உள்ளது. பிக் பாஷ் லீகில் முன்பு கூரையை தொட்டால் டெட் பால் என்ற விதி இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டது.

Story first published: Friday, December 21, 2018, 12:46 [IST]
Other articles published on Dec 21, 2018
English summary
BBL 2018 Ashton Turner feels “hit the roof six” is not a good rule
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X