For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இம்பாலில் இருந்து டெல்லிக்கு ஆம்புலன்ஸ்.. குத்துச்சண்டை வீரருக்கு உதவிய ஸ்பைஸ்ஜெட் விமானம்!

டெல்லி : 41 வயதாகும் குத்துச் சண்டை வீரர் டிங்கோ சிங் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.

அதற்கு சிகிச்சை பெற அவர் டெல்லிக்கு செல்ல வேண்டும். ஆனால், லாக்டவுன் காரணமாக அவரால் மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து டெல்லி செல்ல முடியவில்லை.

இந்த நிலையில், அவருக்கு தன் விமான ஆம்புலன்ஸ் மூலம் உதவ முன் வந்துள்ளது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்.

தங்கப் பதக்கம் வென்றவர்

தங்கப் பதக்கம் வென்றவர்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வாங்கிக் கொடுத்தவர் டிங்கோ சிங். இன்றைய குத்துச் சண்டை வீரர்கள் பலருக்கு முன்னுதாரணமாக இருந்தவர். ஆனால், அவர் தற்சமயம் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

விமான சேவை இல்லை

விமான சேவை இல்லை

அதற்கு சிகிச்சை பெற இந்த நேரம் அவர் டெல்லியில் இருக்க வேண்டும். ஆனால், லாக்டவுன் காரணமாக எந்த விமான சேவையும் கிடைக்கவில்லை. மேலும், மணிப்பூரில் இருந்து கார் மூலமாக டெல்லி செல்வது மிகவும் கடினமான காரியம்.

உதவி

உதவி

இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன தலைவர் அஜய் சிங், டிங்கோ சிங்குக்கு உதவ முன் வந்துள்ளார். அவர் இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவராகவும் இருக்கிறார். அவர் முற்றிலும் இலவசமாக ஸ்பைஸ்ஜெட் விமான ஆம்புலன்ஸ் சேவையை டிங்கோ சிங்கிற்கு அளிக்க உள்ளார்.

சிறப்பு விமானம்

சிறப்பு விமானம்

ஏப்ரல் 25 அன்று சிறப்பு ஸ்பைஸ்ஜெட் விமானம் டிங்கோ சிங்கை டெல்லிக்கு அழைத்து செல்ல உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அவர் பத்திரமாக மருத்துவமனை சென்று அங்கே சிகிச்சை பெறுவார் எனவும் கூறி உள்ளார் அஜய் சிங்.

Story first published: Friday, April 24, 2020, 19:24 [IST]
Other articles published on Apr 24, 2020
English summary
Boxer Dingko Singh to be airlifted by Spicejet for cancer treatment in Delhi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X