For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மைக் டைசனின் அரிதிலும் அரிதான கார் ஏலம்.. அதுவும் இவ்வளவு தொகைக்கா??.. ஃபெராரி எஃப்50-ன் ஸ்பெஷல்!

அமெரிக்கா: குத்துச்சண்டை ஜாம்பவனான மைக் டைசன் வைத்திருந்த மிகவும் அரிதான கார் ஒன்று ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

Recommended Video

India அணியின் Captain-ஆக KL Rahul பெயர் அறிவிப்பு | IND vs ZIM *Cricket

1990ம் ஆண்டுகளில் குத்துச்சண்டை உலகை கட்டி ஆண்டுக்கொண்டிருந்தவர் அமெரிக்காவின் மைக் டைசன்.

தொடர்ச்சியான வெற்றிகளால் உலகில் குத்துச்சண்டை என்றாலே மைக் டைசன் என்ற பெயர் வரும் அளவிற்கு புகழை பெற்றார்.

34 ரன்களுக்கு 8 விக்கெட் போச்சு.. வரலாற்று தங்கத்தை மிஸ் செய்த இந்திய மகளிர் அணி 34 ரன்களுக்கு 8 விக்கெட் போச்சு.. வரலாற்று தங்கத்தை மிஸ் செய்த இந்திய மகளிர் அணி

மைக் டைசனின் கார்

மைக் டைசனின் கார்

குத்துச்சண்டை மீது தீராத மோகம் கொண்டிருந்த மைக் டைசனுக்கு சொகுசு கார்கள் மீதும் அதீத காதல் இருந்தது. அதன்படி ஃபெராரி, லம்போர்ஹினி, பென்ட்லி, ரோல்ஸ் ராய்ஸ் என உலகின் விலை உயர்ந்த கார்களை தனது வீட்டில் வாங்கிக்குவித்தார். அவர் வாங்கிய கார்களில் எப்போதுமே தனித்துவமான விஷயங்கள் அடங்கியிருக்கும். அதில் முக்கியமான ஒன்று தான் ஃபெராரி எஃப் 50 ( ferari F50 ) ரக கார்.

 அரிய ரக கார்

அரிய ரக கார்

உலகில் மிகவும் அரிதிலும் அரிதான கார் இந்த ஃபெராரி எஃப் 50. ஏனென்றால் இந்த மாடலில் மொத்தமாக 349 கார்கள் மட்டுமே தான் உலகளவில் தயாரிக்கப்பட்டது. அதிலும் 73 கார்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. அதில் ஒன்றை தான் மைக் டைசன் அதிக விலை கொடுத்து கடந்த 1996ம் ஆண்டு வாங்கியிருந்தார்.

 ஏலம் போனது

ஏலம் போனது

இந்நிலையில் இந்த கார் இன்று ஏலத்தில் விடப்பட்டுள்ளது. பல்வேறு தொழிலதிபர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்ட இந்த கார் இறுதியில் 42 லட்சம் டாலர்களுக்கு வாங்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.3.35 கோடிக்கு இந்த காரை வாங்கியுள்ளனர்.

அப்படி என்னதான் ஸ்பெஷல்

அப்படி என்னதான் ஸ்பெஷல்

இந்த ஃபெராரி எஃப்50 கார் 4.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயங்குகிறது. மிகவும் குறைவாக மைலேஜ் கிடைக்கும் இந்த கார், 513 குதிரைத்திரன் மற்றும் 8500 ஆர்பிஎம்-ஐ வெளிப்படுத்தும். இதன் மூலம் இந்த காரால் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3.6 விநாடிகளில் எட்ட முடியும். இதன் அதிகபட்ச வேகம் 325கிலோ மீட்டர் ஆகும். மைக் டைசன் வைத்திருந்த கார் வெறும் 10,000 கிலோ மீட்டர் தூரமே ஓடியிருந்தது குறிப்பிடதக்கது.

Story first published: Tuesday, August 23, 2022, 17:46 [IST]
Other articles published on Aug 23, 2022
English summary
Mike tyson's Ferrari f50 car sold in auction ( மைக் டைசனின் கார் ஏலம் விடப்பட்டது ) குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனின் மிகவும் அரிதான ஃபெராரி எஃப் 50 கார் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X