For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக குத்து சண்டை போட்டியில் மேரி கோம் அதிர்ச்சி தோல்வி.. ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி இழந்தார்

By Veera Kumar

அஸ்தானா: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், இன்று நடைபெற்ற உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்ஸ் போட்டியின் (51 கிலோ பிரிவு) 2வது சுற்றில் ஜெர்மனியின் அஸ்சே நிர்மனியிடம் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், அவர், ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்துவிட்டார்.

Boxing: Mary Kom fails to qualify for Rio

பிரேசிலின், ரியோ டி ஜெனிரோவில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டுமானால் கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் தற்போது நடைபெற்றுவரும் உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப்பில் அரை இறுதிக்காவது முன்னேற வேண்டும் என்பது அவசியம். ஆனால், 2வது ரவுண்டிலேயே மேரிகோம் தோல்வியை தழுவியுள்ளார்.

2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மேரி கோம், வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.

Story first published: Saturday, May 21, 2016, 17:20 [IST]
Other articles published on May 21, 2016
English summary
Indian boxing icon M.C. Mary Kom will not be able to represent India at the Rio Olympics after she faltered in the World Boxing Championships' second round here on Saturday. Olympic 2012 bronze medallist Mary, competing in the flyweight category (51 kg) lost 0-2 to Germany's Azize Nimani. World Championships are the final qualifying competition for the Rio Games to be held in August. An entry into the semi-finals not only assures the boxer of a medal but also a berth for the Olympics.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X