For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட என்னண்ணே நீங்க.. உங்க கண்ணை நீங்களே குத்திட்டீங்களே.. வடிவேலு கதையா இருக்கே!

லண்டன்: வடிவேலு பட காமெடி போல, குத்துச் சண்டை வீரர் சாம் மேக்ஸ்வெல்லுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. பயிற்சி கொடுக்கிறேன் பாருங்க என்று சொல்லிக் கொண்டு அவரது கண்ணை அவரே குத்திக் கொண்டு விட்டார்.

Recommended Video

ரசிகர்கள் இல்லாம டி20 தொடர் நினைச்சு பார்க்கக்கூட முடியல - ஆலன் பார்டர்

வடிவேலு பட காமெடியான கடல்லேயே ஜாமீன் இல்லையாம் காட்சியை மறந்திருக்க முடியாது. அப்போது சிறைக் கம்பிக்கு உள்ளே இருந்து கொண்டு தனது சிஷ்யர்களை அடிப்பதாக கூறிக் கொண்டு இவர் ரத்தக் காயம் அடைவார். அந்த மாதிரி ஆகியுள்ளது சாமின் நிலை.

சாம் மேக்ஸ்வெல் கொடுத்த லைவ் பாக்சிங் பயிற்சியின்போது நடந்த சிறு விபத்தால் அந்த லைவ் பாதியிலேயே நின்று போய் விட்டது.

இதுதான் எங்க முடிவு.. சைலன்ட்டாக ஐபிஎல் அணிகளுக்கு மெசேஜ் அனுப்பிய பிசிசிஐ.. வெளியான ரகசியம்!இதுதான் எங்க முடிவு.. சைலன்ட்டாக ஐபிஎல் அணிகளுக்கு மெசேஜ் அனுப்பிய பிசிசிஐ.. வெளியான ரகசியம்!

வீட்டிலேயே பயிற்சி

வீட்டிலேயே பயிற்சி

இப்போது இங்கிலாந்திலும் கூட லாக்டவுன் சமயம்தான். அங்கும் கொரோனாவைரஸ் பரவிக் கொண்டுள்ளது. அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனே அதில் சிக்கி மீண்டு வந்துள்ளார். இந்த நிலையில் லாக்டவுன் சமயத்தில் குத்துச் சண்டை பிராக்டிஸ் லைவ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் களம் இறங்கினார் சாம் மேக்ஸ்வெல்.

நல்லாதான் போச்சு

நல்லாதான் போச்சு

பயிற்சியையும் சூப்பராகவே ஆரம்பித்தார். எப்படி குத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வேகம் வேகமாக பாக்ஸிங் பேகில் குத்திக் கொண்டே வந்தவர் தெரியாத்தனமாக தனது இடது கண்ணில் ஓங்கிக் குத்தி விட்டார். பன்ச் படு பலமாக விழுந்ததால் அப்படியே கண் வீங்கி விட்டது. பிறகென்ன பயிற்சி பாடத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு சேரில் உட்கார்ந்து விட்டார்.

இடது கண் போச்சே

கண் நல்லா வீங்கிப் போய் விட்டது. இது லைவ் வேறு என்பதால் பலரும் பார்த்து பதறிப் போய் விட்டனர். கண்ணைச் சுற்றிலும் நல்லா வீங்கியிருந்தது. பாடத்தை அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்ல கண்ணைப் பாருங்க சாம் என்று பலரும் பரிவுடன் கூற ஆரம்பித்து விட்டனர். 31 வயதான சாம் ஐரோப்பிய லைட்வெயிட் பிரிவு சாம்பியன் ஆவார்.

டைசனுக்கும் விழுந்த குத்து

டைசனுக்கும் விழுந்த குத்து

இதுமாதிரி சொந்த கையாலேயே குத்து வாங்குவது என்பது பாக்சிங் வீரர்களுக்கு சகஜம்தான். இப்படித்தான் முன்பு மைக் டைசனும், ஒரு போட்டியின்போது எதிராளியை வேகமாக குத்தப் போய் அந்த குத்து அவருக்கே வந்து சேர்ந்து காயமடைந்தார். 2016ம் ஆண்டு முதல் குத்துச் சண்டையில் ஈடுபட்டு வருகிறார் மேக்ஸ்வெல். இதுவரை போட்டியிட்ட 13 போட்டிகளிலும் அவர் வென்றுள்ளார். அதில் 11 நாக்அவுட் வெற்றியாகும்.

Story first published: Wednesday, April 15, 2020, 11:23 [IST]
Other articles published on Apr 15, 2020
English summary
British boxing Champion Sam Maxwell Punched his own eyes during a live Programme in Instagram
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X