For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகம்மது அலியின் தாடையைப் பெயர்த்து சாதனை படைத்த கென் நார்டன் மரணம்

லாஸ் வேகாஸ்: குத்துச் சண்டை அரங்கில் அசைக்க முடியாத ஜாம்பவானாக ஒரு காலத்தில் வலம் வந்த முகம்மது அலியின் தாடையைப் பெயர்த்து காயப்படுத்தி சாதனை படைத்தவரான முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியன் கென் நார்டன் மரணமடைந்தார்.

அவருக்கு வயது 70. மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

முகம்மது அலியை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமைக்கும் உரியவர் நார்டன். 1973ல் நடந்த போட்டியில் அலியை அதிரடியாக வீழ்த்தியதோடு, அவரது தாடையையும் பெயர்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நார்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

பல வருடமாகவே உடல் நிலை சரியில்லை

பல வருடமாகவே உடல் நிலை சரியில்லை

நார்டன் ஒரு மிகச் சிறந்த வீரர் ஆவார். கடந்த சில வருடங்களாகவே அவருக்கு உடல் நலம் சரியில்லை. பக்கவாதம் வேறு அவரைச் சிரமப்படுத்தி வந்தது.

2 வருடமாக உயிர் போராட்டம்

2 வருடமாக உயிர் போராட்டம்

கடந்த 2 வருடமாக அவரது நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.

73ல் புயலான விஸ்வரூபம் எடுத்த நார்டன்

73ல் புயலான விஸ்வரூபம் எடுத்த நார்டன்

1973ம் ஆண்டுதான் நார்டனின் வாழ்க்கையில் மறக்க முடியாத வருடமாகும். அந்த வருடத்தில்தான், சாண்டியாகோவில் நடந்த போட்டியில் பெரும் ஜாம்பவானாக உலக சாம்பியனாக திகழ்ந்தவரான முகம்மது அலியை அதிரடியாக வீழ்த்தினார் நார்டன்.

தாடை காலி

தாடை காலி

நார்டன் முதல் சுற்றிலிருந்தே அலியை தடுமாற வைத்து அத்தனை பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அலியை ஒரு கட்டத்தில் அதிரடியாக அவர் முகத்தில் குத்த தாடை பெயர்ந்து காயமடைந்தார் அலி. இருந்தாலும் வலியுடன் அவர் தொடர்ந்து மோதினார். இறுதியில் நார்டனே வென்றார்.

அலிக்கு 2வது தோல்வி

அலிக்கு 2வது தோல்வி

முகம்மது அலிக்கு இது அவரது வாழ்க்கையில் கிடைத்த 2வது தோல்வியாகும். அவரை 1971ல் ஜோ பிரேசியர் தோற்கடித்திருந்தார். அதன் பிறகு நார்டன் மட்டுமே அவரை வீழ்த்தியவர் ஆவார்.

அலியைப் பார்த்து நலம் விசாரித்த பண்பு

அலியைப் பார்த்து நலம் விசாரித்த பண்பு

போட்டிக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அலி. அவரை மருத்துவமனைக்கு நேரில் போய்ப் பார்த்து நலம் விசாரித்தார் நார்டன். அப்போது நார்டனை அலி வெகுவாகப் பாராட்டினார். அதேசமயம், மீண்டும் உங்களுடன் மோத நான் விரும்பவில்லை என்றும் சிரித்தபடி கூறினார்.

மீண்டும் மோதி 2 முறை வென்ற அலி

மீண்டும் மோதி 2 முறை வென்ற அலி

அதேசமயம், இருவரும் மீண்டும் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. ஒருமுறை அல்ல, 2 முறை. இரண்டிலுமே அலிதான் வென்றார்.

81ல் ஓய்வு

81ல் ஓய்வு

கடைசியாக 1981ம் ஆண்டு குத்துச் சண்டையில் மோதினார் நார்டன். அதன் பிறகு அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

Story first published: Friday, September 20, 2013, 12:23 [IST]
Other articles published on Sep 20, 2013
English summary
Former heavyweight champion Ken Norton, who shocked the boxing world in 1973 when he became the second man to beat Muhammad Ali in a fight, died Wednesday at a local care facility. He was 70. His son, Ken Norton Jr., a coach with the Seattle Seahawks in the National Football League, confirmed the death to The Associated Press. Norton, the only heavyweight champion never to win the title in the ring, had been in poor health for the last several years after suffering a series of strokes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X