For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில் நிகழ்ந்த சோகம்.. கிக் பாக்சிங் போட்டியில் ஒருவர் பலி.. எப்படி நடந்தது.. அமைச்சர் இரங்கல்

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் எதிரணி வீரர் தாக்கியதில், அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான யோரா டேட் உயிரிழந்தார்.

Recommended Video

AsiaCup2022 இந்திய வீரர் Virat Kohli உருக்கமான பேச்சு

குத்துச்சண்டை விட, கிக் பாக்சிங் இன்னும் கொஞ்சம் ஆபத்தான விளையாட்டு. குத்துச்சண்டையில் கையை மட்டும் தான் பயன்படுத்த முடியும்.

Kick Boxing Arunachal Pradesh boxer died after got head injury

ஆனால் கிக் பாக்சிங்சில் கை, தலை, கால் என அனைத்தையும் பயன்படுத்தி எதிர் வீரரை தாக்கலாம்.

வீரர்கள் பாய்ந்து உதைக்கும் போது அடி பலமாக விழும். தமிழ் சினிமாவில் கிக் பாக்சிங் குறித்து பத்ரி, எம்.கும்ரன் சன் ஆஃப் மகாலட்சுமி போன்ற படங்களில் காண்பிக்க பட்டு இருக்கும். இந்த நிலையில், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான வாகோ இந்தியா சீனியர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் கிக் பாக்ஸிங் போட்டி நடந்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி நடந்த போட்டியில் மகாராஷ்டிரா வீரர் கேசவ் முடேலும், அருணாச்சலப்பிரதேச வீரர் யோரா டேட் ஆகியோரும் பலப்பரீட்சை நடத்தினர். அப்போது கேசவ் கொடுத்த கிக்கை கணிக்க முடியாமல் யோரா டேட் தவற, அந்த உதை அவரது தலையில் பட்டது. . இதில் யோரோ டேடுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆசிய கோப்பையில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? ஒரே இடத்துக்கு 3 வீரர்கள் போட்டி.. தலைவலியில் ரோகித் ஆசிய கோப்பையில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? ஒரே இடத்துக்கு 3 வீரர்கள் போட்டி.. தலைவலியில் ரோகித்

யோரா டேட்டுக்கு கடந்த 3 நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்த வீரருக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, தனது சொந்த நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கினார். இந்த சம்பவம், கிக் பாக்சிங் விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, August 24, 2022, 20:24 [IST]
Other articles published on Aug 24, 2022
English summary
Kick Boxing Arunachal Pradesh boxer died after got head injury சென்னையில் நிகழ்ந்த சோகம்.. கிக் பாக்சிங் போட்டியில் ஒருவர் பலி.. எப்படி நடந்தது.. அமைச்சர் இரங்கல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X