For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாங்க பஞ்ச் டயலாக் பேசமாட்டோம்… பஞ்ச் கொடுப்போம்…. பட்டம் வென்றார் மேரி கோம்

By Srividhya Govindarajan

டெல்லி: இந்திய ஓபன் பாக்சிங் போட்டியில் ஆண்கள் திணறுகையில், மேரி கோம் உள்பட பெண்கள் பிரிவில் பட்டங்களை அள்ளினர்.

இந்தியா ஓபன் பாக்சிங் போட்டி டெல்லியில் நடந்தது. இதில் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் ஐந்து முறை உலக சாம்பியன், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான 36 வயதாகும் மேரி கோம், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோசி கபுகோவை சந்தித்தார்.

Mary kom excell


நேற்று இரவு நடந்த பைனலில் 4-1 என்ற கணக்கில் மேரி கோம் அபாரமாக வென்று தங்கம் வென்றார்.

அசாமை சேர்ந்த பிலாவோ பசுமதாரி, மகளிர் 64 பிரிவில் தங்க வேட்டை துவக்கி வைத்தார். முன்னாள் உலகச் சாம்பியனான பசுமதாரி, தாய்லாந்தின் சுடபோர்ன் சீசோன்தீயை 3-2 என்ற கணக்கில் வென்றார்.

அசாமை சேர்ந்த லாவ்லினா போர்ஹோஹைன்,மகளிர் 69 கிலோ எடைப் பிரிவில், பூஜாவை வென்று தங்கம் வென்றார்.

முன்னணி வீராங்கனையான எல். சரிதா தேவி, 60 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பின்லாந்தின் மரியா போட்கினானிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.

ஆடவர் பிரிவில் 91 கிலோ எடைப் பிரிவில் சஞ்சித் தங்கம் வென்றார். 60 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் ஷிவ தாபாவை வென்ற மனிஷ் கவுசிக், பைனலில் விளையாடாமலேயே தங்கம் வென்றார். மங்கோலிய வீரர் மிஷீல்ட் காயம் காரணமாக விலகியதால், கவுசிக் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

91 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவில் சதீஷ் குமார், 69 கிலோ எடைப் பிரிவில் திஷேன் தாகர், 81 கிலோ எடைப் பிரிவில் தேவான்சு ஜெய்ஸ்வாஸ், 75 கிலோ எடைப் பிரிவில் சவேட்டி போரா ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.
Story first published: Friday, February 2, 2018, 12:12 [IST]
Other articles published on Feb 2, 2018
English summary
Mary Kom crowned Indian open
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X