For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முழங்காலிட்டு.. கருப்பர் இனத்தவரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மைக் டைசன்

லண்டன்: கருப்பர் இனத்தவரின் போராட்டத்துக்கு பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழங்காலிட்டபடி போஸ் கொடுத்து அதைப் போட்டு இந்தப் போராட்டத்துக்கு வலிமை சேர்த்துள்ளார். 2 முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றவர் மைக் டைசன். தற்போது 53 வயதாகும் டைசன் தொடர்ந்து போர்க்குணத்துடன் கூடியவராகவே வலம் வருகிறார்.

Black Lives Matter.. சபாஷ் ஹேமில்டன்.. ஒடுக்கப்பட்டோருக்காக சரியான நேரத்தில் கிடைத்த குரல்Black Lives Matter.. சபாஷ் ஹேமில்டன்.. ஒடுக்கப்பட்டோருக்காக சரியான நேரத்தில் கிடைத்த குரல்

Mike Tyson takes a knee to support Black Lives Matter movement

திங்கள்கிழமையன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழங்காலிட்டபடி அவர் அமர்ந்திருக்கும் படத்தைப் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. 3 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன. டிவிட்டரில் 10,000 லைக்குகள் குவிந்துள்ளன. போட்ட 45 நிமிடத்திலேயே இப்படி வரவேற்பு கிடைத்துள்ளது.

அமெரிக்கா முழுவதும் கருப்பர் இனத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் படுகொலைக்கு நியாயம் கேட்டு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. உலகின் பல நாடுகளிலும் கூட இது போராட்டமாக மாறியுள்ளது. பல்வேறு துறையினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விளையாட்டுத்துறையினரும் இதில் விதி விலக்கல்ல.

தற்போது உலக ஹெவிவெயிட் சாம்பியன் அந்தோணி ஜோசுவாவும் இப்போராட்டத்துக்குஆதரவு தெரிவித்துப் பேசி உள்ளார். ஜார்ஜ் போர்மனும் ஆதரவு தெரிவித்துள்ளார். மைக் டைசன் புகைப்படத்திற்கு அவர் போட்டுள்ள கமெண்ட்டில், நம்பிக்கைதான் அனைத்தையும் சாதிக்கும். நாம் நம்பிக்கையுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, June 9, 2020, 15:46 [IST]
Other articles published on Jun 9, 2020
English summary
Mike Tyson has shown his solidarity for the Black Lives Matter movement by taking a knee in a social media post
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X