For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

3 குழந்தைகளுக்கு அம்மா... மாநில சாம்பியன்ஷிப்புல வெள்ளி பதக்கம்... கனவு நிறைவேறுமா?

தாமரசேரி : கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த லஜ்வந்தி என்ற 30 வயது பெண் குத்துச்சண்டை வீராங்கனை மாநில சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

3 குழந்தைகளுக்கு தாயான பின்பு இவர் மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார்.

என்ன நம்பிக்கைடா சாமி.அவர் கண்டிப்பா அணிக்கு தேவை.இளம் வீரருக்காக குரல் கொடுக்கும் தினேஷ் கார்த்திக்என்ன நம்பிக்கைடா சாமி.அவர் கண்டிப்பா அணிக்கு தேவை.இளம் வீரருக்காக குரல் கொடுக்கும் தினேஷ் கார்த்திக்

தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் பல பதக்கங்களை வென்றுள்ள லஜ்வந்தி, மாநிலத்தின் முதல் பெண் குத்துச்சண்டை பயிற்சியாளராவதே தனது கனவு என்று தெரிவித்துள்ளார்.

கோழிக்கோட்டின் லஜ்வந்தி

கோழிக்கோட்டின் லஜ்வந்தி

குத்துச்சண்டையில் இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டுவரும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆயினும் சரியான ஸ்பான்சர்ஷிப் கிடைக்காமல் இடையில் விட்டு செல்லும் பெண்களும் இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக இருக்கிறார் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த லஜ்வந்தி.

நிதி பிரச்சனை

நிதி பிரச்சனை

தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஜூனியர் மகளில் பிரிவில் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ள இவர், கடந்த 2008ல் தேசிய சாம்பியன்ஷிப்பில்லில் ஜூனியர் மகளிர் பிரிவில் தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்று தேசிய முகாமிற்காக தேர்வு செய்யப்பட்டு, நிதி பிரச்சினை காரணமாக இடைநின்றுள்ளார்.

மீண்டும் வெற்றி

மீண்டும் வெற்றி

இதையடுத்து திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயாகி தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு குத்துச்சண்டையில் மீண்டும் தனது பயணத்தை துவக்கியுள்ளார் லஜ்வந்தி. திருவனந்தபுரத்தில் கடந்த 13ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

லஜ்வந்தி நம்பிக்கை

லஜ்வந்தி நம்பிக்கை

தற்போது பிட்னஸ் டிரெயினராக பணிபுரிந்துவரும் 30 வயதான லஜ்வந்தி, தனக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் எந்த வேலையும் கிடைக்கவில்லை என்றும், மாநிலத்தில் முதல் பாக்சிங் கோச்சாக தனக்கு வேலை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, March 16, 2021, 12:29 [IST]
Other articles published on Mar 16, 2021
English summary
Lajwanti hopes to become the first woman boxing coach in the state
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X