For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹெராயின் சர்ச்சை... சைப்ரஸ், கியூபா குத்துச் சண்டைப் போட்டிகளிலிருந்து விஜேந்தர் நீக்கம்

Vijender dropped from Cyprus, Cuba boxing events
டெல்லி : ஹெராயின் போதைப் பொருளை பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் சைப்ரஸ் மற்றும் கியூபாவில் நடைபெறும் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டுக் கழகத்தில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் தேர்வு போட்டிகள் நடந்தன. அதில் விஜேந்தர் கலந்து கொள்ளவில்லை, தவிர்த்து விட்டார். இதனால் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.

இதுகுறித்து இந்திய குத்துச் சண்டைக் கழகத்தின் தலைவர் அபிஷேக் மடோரியா கூறுகையில், விஜேந்தர் தகுதிப் போட்டிகளுக்கு வரவில்லை. இதனால் அவர் சைப்ரஸ், கியூபா போட்டிகளில் பங்கேற்க முடியாது. அணியில் அவர் சேர்க்கப்படவில்லை என்றார்.

இருப்பினும் அக்டோபர் 4 முதல் 13ம் தேதி வரை கஸகஸ்தானில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, April 7, 2013, 11:26 [IST]
Other articles published on Apr 7, 2013
English summary
Olympic bronze medallist boxer Vijender Singh, who has been accused of consuming drugs, was Saturday dropped from the India squad which is to tour Cyprus and Cuba. The 27-year-old had skipped the selection trials at the National Institute of Sports (NIS) in Patiala Friday and Saturday. Earlier, the Indian Amateur Boxing Federation (IABF) vice-president Nivaran Mukherjee had said that if Vijender missed the trials, he would not be considered for the two events.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X