For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழைய எனர்ஜியோட இந்த ஆண்டிலேயே மீண்டும் விளையாடுவோம்... விஜேந்தர் சிங் நம்பிக்கை

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒலிம்பிக் உள்ளிட்ட அனைத்து போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

Recommended Video

2011 World Cup final: Sachin reveals the secret of Dhoni's no.5 batting

இந்நிலையில் தன்னுடைய கேரியரின் இரண்டாவது இன்னிங்சை தான் இந்த ஆண்டின் இறுதிக்குள் துவங்குவேன் என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எங்கேயும் நகரக் கூடாது.. சேவாக்கை எங்கேயும் நகரக் கூடாது.. சேவாக்கை "லாக்டவுன்" செய்த சச்சின்.. உலகக்கோப்பை பைனலில் நடந்த சம்பவம்!

Vijender Singh hopes his pro career will resume in second half of 2020

தன்னுடைய உடலை பிட்னெசாக வைத்துக்கொள்ளும் முயற்சியில் தான் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாகவும் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும் உணவில்லாதவர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்து பெருமை சேர்த்தவர் விஜேந்தர் சிங். பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரராக இவர் உள்ளார். இவரது சாதனைகளுக்கு தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று தடைக்கல்லாக மாறியுள்ளது.

இந்நிலையில், பழைய வலிமையுடன் இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் தன்னுடைய போட்டிகளை விளையாடுவேன் என்று விஜேந்தர் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக ஒலிம்பிக் உள்ளிட்ட அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆண்டின் இறுதியில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவங்குவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய வீட்டிலேயே அனைத்து பயிற்சி உபகரணங்களும் உள்ளதாக தெரிவித்துள்ள விஜேந்தர் சிங், அதை கொண்டு தன்னுடைய உடலை பிட்னெசாக வைத்துக் கொள்ளும் பயிற்சிகளில் தான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

இதனிடையே, அரசியலிலும் பரபரப்பாக இயங்கிவரும் விஜேந்தர் சிங், கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் போட்டியிட்டவர். இந்நிலையில், தற்போதைய சூழல் குறித்தும், கொரோனா வைரஸ் குறித்தும் மருத்துவர்களிடம் தொடர்ந்து ஆலோசனை பெற்று வருவதாகவும், உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு கிடைக்க வழிவகை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, April 6, 2020, 15:45 [IST]
Other articles published on Apr 6, 2020
English summary
Vijender Singh hopes his pro career will resumes in the end of 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X