For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20, ஒருநாள் போட்டிகள்ல விளையாடியிருந்தாலும் 100வது டெஸ்ட் போட்டியில விளையாடியிருப்பேன்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் 3வது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் துவங்கி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது.

இது வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.

டிவிஸ்ட்.. ஆர்சிபியிலுருந்து 9 முக்கிய வீரர்கள் நீக்கம்.. சாட்டையை சுழற்றிய கோலி.. முழு லிஸ்ட்!டிவிஸ்ட்.. ஆர்சிபியிலுருந்து 9 முக்கிய வீரர்கள் நீக்கம்.. சாட்டையை சுழற்றிய கோலி.. முழு லிஸ்ட்!

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளில் குறைந்த ஓவர்கள் போட்டிகளில் பங்கேற்காத இஷாந்த் சர்மா, தான் அதில் விளையாடியிருந்தாலும் இந்த சாதனையை எட்டியிருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

100வது டெஸ்ட் போட்டி

100வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நாளை மறுதினம் முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பங்கேற்று ஆடவுள்ளார். இது அவருடைய 100வது டெஸ்ட் போட்டியாகும்.

2வது வேகப்பந்து வீச்சாளர்

2வது வேகப்பந்து வீச்சாளர்

காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த இஷாந்த் சர்மா, தனது 100வது போட்டியில் பங்கேற்று ஆடவுள்ளார். இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவிற்கு பிறகு 100 டெஸ்ட் போட்டிகள் சாதனையை எட்டும் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை இதன்மூலம் இஷாந்த் சர்மாவிற்கு கிடைத்துள்ளது.

பங்கேற்காத இஷாந்த்

பங்கேற்காத இஷாந்த்

கடந்த சில ஆண்டுகளாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார் இஷாந்த் சர்மா. இந்நிலையில், அதன் காரணமாகதான் அவர் இந்த சாதனையை விரைவில் எட்டியுள்ளாரா என்ற கேள்விக்கு பதிலளித்த இஷாந்த் சர்மா, தான் குறைந்த ஓவர்கள் போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பேன் என்று பதிலளித்துள்ளார்.

இஷாந்த் சர்மா உறுதி

இஷாந்த் சர்மா உறுதி

தன்னுடைய பிட்னஸ் மற்றும் தேறுதலை நினைவில் கொண்டு தான் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ள இஷாந்த் சர்மா, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பயிற்சிகளை மேற்கொள்ளவே தான் விரும்புவதாகவும் எதிர்காலத்தை நினைத்து நெருக்கடிகளை மனதில் ஏற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

Story first published: Monday, February 22, 2021, 16:40 [IST]
Other articles published on Feb 22, 2021
English summary
I used to only train hard, but now I focus more on recovery -Ishant Sharma
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X