For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுதான் 'கிங்' கோலி.. சச்சின் சாதனையை முறியடித்து அசத்தல்

Recommended Video

WORLD CUP IND VS PAK Kohli out | வெளியேறிய கோலி, வெடித்தது அவுட் சர்ச்சை!

மான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில், ஒருநாள் போட்டிகளில் தனது 11,000 ரன்களை கடந்து சாதித்தார் இந்திய கேப்டன் விராட் கோலி.

சச்சினுக்கு பிறகு, மாபெரும் சூப்பர் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளவர் விராட் கோலி. இந்தியாவின் பேட்டிங் மிஷினாக இருப்பவர் அவர். இன்றைய போட்டியில், விராட் கோலி, தனது பேட்டிங் திறமையின் மற்றொரு முத்திரையை பதித்துள்ளார். ஆம், வெறும் 222வது இன்னிங்சில், 11,000 ரன்களை கடந்தார் அவர்.

11000 ODI runs for Virat Kohli

கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் இந்த ரன்களை எட்டுவதற்கு, 276 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், பேட்டிங் லெஜன்ட்டுமான, ரிக்கி பாண்டிங் 286 இன்னிங்சில் 11,000 ரன்களை கடந்தார். நமது தாதா, சவுரவ் கங்குலியும் இந்த லிஸ்டில் உள்ளார். அவர் 288 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களையும், தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டராக இருந்த ஜாக் கல்லிஸ் 293 இன்னிங்ஸ்களிலும் இந்த ரன்களை எட்டினர்.

மீண்டும் வேலை செய்த தோனி ஐடியா.. இந்திய அணியில் கடைசி நொடியில் அதிரடி மாற்றம்.. குழம்பும் பாக்! மீண்டும் வேலை செய்த தோனி ஐடியா.. இந்திய அணியில் கடைசி நொடியில் அதிரடி மாற்றம்.. குழம்பும் பாக்!

கோலியின் பேட்டிங் சராசரி 60 ரன்களை ஒட்டியுள்ளது. ஸ்ட்ரைக் ரேட், கிட்டத்தட்ட 93 என்ற அளவில் சூப்பராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 16, 2019, 18:32 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
11000 ODI runs for Virat Kohli. And as everyone knows he is the fastest to reach that mark.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X