For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த நாள் தான் எங்களுக்கு தீபாவளி.. தல தீபாவளி! ட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்!

Recommended Video

#12YearsOfCaptainDhoni | ட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்!- வீடியோ

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தோனி, கேப்டன் பதவி ஏற்று 12 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ட்விட்டரில் "#12YearsOfCaptainDhoni" என்ற ஹேஷ்டேக்கில் இது தொடர்பான பதிவுகள் பகிரப்பட்டு, இந்திய அளவில் டிரென்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.

தோனியின் கேப்டன்சி சாதனைகள், அவரிடம் தங்களுக்கு பிடித்தது என பலவற்றையும் பகிர்ந்து வருகிறார்கள் தோனி ரசிகர்கள்.

யப்பா இந்தியன் டீம்! இந்த யப்பா இந்தியன் டீம்! இந்த "கத்துக்குட்டி" டீம்கிட்ட தோத்துட்டு வந்துறாதீங்க.. மானமே போயிடும் #INDvSA

வதந்தி

வதந்தி

2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. அந்த வதந்தி அடங்கினாலும், தோனி இந்திய அணி அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும், தற்போது நடக்க உள்ள தென்னாப்பிரிக்கா தொடரிலும் பங்கேற்கவில்லை.

மீண்டும் வதந்தி கிளம்பியது

மீண்டும் வதந்தி கிளம்பியது

இந்த நிலையில், நேற்று முன்தினம், தோனி ஓய்வு பெற உள்ளார் என்ற வதந்தி கிளம்பியது. மாலை ஏழு மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து உள்ளார் என்றெல்லாம் கப்சா கிளப்பி விட்டார்கள்.

ட்விட்டரில் கண்ணீர்

ட்விட்டரில் கண்ணீர்

பதறிப் போன தோனி ரசிகர்கள் ட்விட்டரில் கண்ணீர் விட்டு வந்தனர். பின்னர், அது வதந்தி என தெரிந்து நிம்மதி அடைந்தனர். அதற்கு அடுத்த நாள் தோனி கேப்டன் பதவி ஏற்று 12 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது என்பதை அறிந்த அவர்கள் இந்த முறையும் ட்விட்டரை தெறிக்க விட்டனர்.

2007இல் கேப்டன்

2007இல் கேப்டன்

தோனி கடந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக பதவி ஏற்றார். முதல் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி சென்ற போது தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி.

இளம் வீரர்கள் அணி

இளம் வீரர்கள் அணி

இந்தியாவின் மூத்த வீரர்கள் டிராவிட், சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் டி20 உலகக்கோப்பையில் ஆட விரும்பாத நிலையில் இளம் வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு, அதற்கு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆசைக்கு ஆடிட்டு வரட்டும்

ஆசைக்கு ஆடிட்டு வரட்டும்

"ஏதோ நம்ம பசங்க ஆசைக்கு சும்மா ஆடிட்டு வரட்டும்" என்கிற ரீதியில் தான் அந்த தொடருக்கு ஏற்பாடுகள் நடந்தது. பலரும் இந்த அணி மண்ணைக் கவ்வப் போகிறது என்று தான் கூறினார்கள்.

சிங்கம் தோனி

சிங்கம் தோனி

ஆனால், சிங்கம் மாதிரி அணியை வழி நடத்திய தோனி, அன்றைய நாட்களில் விசித்திரமான முடிவுகளை எடுத்து எல்லோரையும் வியக்க வைத்தார். இந்தியா முதல் டி20 உலகக்கோப்பையை வென்றது.

இந்திய கிரிக்கெட்டை மாற்றியது

இந்திய கிரிக்கெட்டை மாற்றியது

அந்த நாள் தான் இந்திய கிரிக்கெட்டை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துச் சென்ற நாள். அதன் பின் தோனி இந்தியாவின் மூலை முடுக்கு எல்லாம் பேசப்பட்டார். ஒருநாள் அணியின் கேப்டன் ஆனார்.

தோனி சாதனை

தோனி சாதனை

2007 டி20 உலகக்கோப்பை, 2011 50 ஓவர் உலகக்கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி என மூன்று ஐசிசி கோப்பை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. மேலும், அவர் காலத்தில் தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தை பிடித்தது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

தோனியின் அத்தனை புகழுக்கும், இந்திய கிரிக்கெட்டின் மாற்றத்துக்கும் வித்திட்டது, தோனி கேப்டன் ஆன அந்த நாள் தான் என அதை தீபாவளி போல கொண்டாடி வருகிறார்கள் தோனி ரசிகர்கள். இதுவரை நடிகர்களுக்கு மட்டுமே வருடத்தை வைத்து டிரென்டிங் செய்து வந்த நிலையில், கிரிக்கெட் வீரர் தோனிக்கும் வருடத்தை வைத்து கொண்டாட துவங்கி உள்ளார்கள்.

Story first published: Saturday, September 14, 2019, 11:42 [IST]
Other articles published on Sep 14, 2019
English summary
#12YearsOfCaptainDhoni is trending number 1 as fans celebrate Dhoni captaincy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X