‘காசு போனா போகுது.. எனக்கு அவர் தேவையில்ல" - 16.25 கோடி வீரரை ஓரங்கட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்

அபுதாபி: இந்த ஐபிஎல் அணிகளோட லாஜிக்கை சில சமயங்களில் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.25) டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்களில் முதல் போட்டியாக அபுதாபியில், ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதி வருகின்றன.

இதில், முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி, தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து லைட்டாக தடுமாறி வருகிறது.

சபாஷ் சரியான போட்டி.. ஐபிஎல்-ன் முதல் டபுள் ஹெட்டர்ஸ்.. அதிரடி மாற்றத்தோடு மோதும் டெல்லி - ராஜஸ்தான் சபாஷ் சரியான போட்டி.. ஐபிஎல்-ன் முதல் டபுள் ஹெட்டர்ஸ்.. அதிரடி மாற்றத்தோடு மோதும் டெல்லி - ராஜஸ்தான்

 க்றிஸ் மோரிஸ் நீக்கம்

க்றிஸ் மோரிஸ் நீக்கம்

எனினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மிக முக்கிய மாற்றமாக ஆல் ரவுண்டர் க்றிஸ் மோரிஸ் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், எவின் லெவிஸ் நீக்கப்பட்டுள்ளார். க்றிஸ் மோரிஸ் கடந்த ஐபிஎல் ஏலத்தில் 16.25 கோடி தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர். அவர் மேல் இவ்வளவு மிகப்பெரிய தொகையை செலுத்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. ஆனால், இந்த போட்டியில் அவரை அணியில் இருந்து வெளியே உட்கார வைத்திருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 ஆனால் கன்சிஸ்டன்சி?

ஆனால் கன்சிஸ்டன்சி?

கடந்த சில போட்டிகளில், பேட்டிங்கிலும் சரி.. பவுலிங்கிலும் சரி.. அவரால் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அவர் ஒரு பவர் ஹிட்டர் என்பது உண்மை தான். ஆனால், எல்லா போட்டிகளிலும் கன்சிஸ்டண்ட்டாக அவரால் ரன்களை அடித்துக் கொண்டே இருக்க முடியாது. அது போல், பவுலிங்கிலும் அவரால் வெரைட்டியாக வீச முடியாது. அவர் ஒரு நல்ல ஆல் ரவுண்டர் என்பதை மறுப்பதற்கில்லை. பட்.. அவர் ஒரு கன்சிஸ்டன்சி ஆல் ரவுண்டர் கிடையாது.

 கழட்டிவிட்ட சிஎஸ்கே

கழட்டிவிட்ட சிஎஸ்கே

அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில வருடங்களுக்கு முன்பு விளையாடிய போதே, அவரது திறமை என்ன என்பதை தோனி மிகத் தெளிவாக அடையாளம் கண்டதால் தான், அவரை ஏலத்தின் போது அணியில் இருந்து ரிலீஸ் செய்ய ஒப்புக் கொண்டார். ஆனால், ஆல் ரவுண்டர் என்ற ஒரே காரணத்துக்காக ராஜஸ்தான் அவரது திறமையைத் தாண்டி பணம் செலுத்தி 16.25 கோடிக்கு வாங்கியது என்பது உண்மையில் டூ மச் தான். இதன் விளைவு இப்போது அவர் அணியில் இருந்து உட்கார வைக்கப்பட்டுள்ளார். சாரி.. சாரி.. 16.25 கோடி வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளது.

 ராஜஸ்தான் பிளேயிங் லெவன்

ராஜஸ்தான் பிளேயிங் லெவன்

டெல்லி அணியில் பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (c & wk), ஷிம்ரோன் ஹெட்மயர், லலித் யாதவ், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (c & wk), லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தெவாட்டியா, கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
16.25 crore worth chris morris out of rr squad - ஐபிஎல்
Story first published: Saturday, September 25, 2021, 16:51 [IST]
Other articles published on Sep 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X