For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2021ன் முதல் சதம்... இலங்கைக்கு எதிராக ஜோ ரூட் அபாரம்... வெல்டன் ரூட்!

கல்லி : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சதமடித்து இந்த ஆண்டை சிறப்பாக துவக்கியுள்ளார்.

அவருக்கு சக வீரர்கள் உற்சாகம் அளித்தனர். இந்த வீடியோவை ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஆஸி. தொடரை விடுங்க.. இனிமே தான் இருக்கு சிக்கல்.. செமயாக சிக்கிக் கொண்ட இந்திய அணி!ஆஸி. தொடரை விடுங்க.. இனிமே தான் இருக்கு சிக்கல்.. செமயாக சிக்கிக் கொண்ட இந்திய அணி!

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியினர் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று துவங்கியுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

 டெஸ்ட்டில் 18வது சதம்

டெஸ்ட்டில் 18வது சதம்

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டின் தனது முதல் சதத்தை அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 18வது சதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார். 163 பந்துகளில் அவர் இந்த சதத்தை அடித்துள்ளார். இதில் 7 பவுண்டரிகளும் அடக்கம். அவரது கேரியரின் மிகவும் முக்கியமான சதமாக இது பார்க்கப்படுகிறது.

26ம் தேதி துவக்கம்

26ம் தேதி துவக்கம்

வரும் 22ம் தேதி துவங்கி 26ம் தேதிவரை அடுத்த டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இதை தொடர்ந்து இந்தியாவில் வரும் மாதம் 5ம் தேதி இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. கிரிக்கெட்டின் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 3 வடிவங்களிலும் தொடர்கள் நடைபெறவுள்ளன.

சக வீரர்கள் பாராட்டு

இந்நிலையில் தொடர்ந்து விளையாடிவரும் ஜோ ரூட்டை அந்த அணியின் சக வீரர்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த வீடியோவை ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அவர் மேலும் இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

Story first published: Friday, January 15, 2021, 20:31 [IST]
Other articles published on Jan 15, 2021
English summary
Plenty of encouragement and appreciation for Joe Root from the England dressing room
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X