ஒரே ஓவரில் 2 கேட்ச் மிஸ் செய்த இந்தியா..சிக்சர் போன பந்தை சுலபமாக பிடித்த சிறுவன்.. கத்துக்கோங்க பா!

லக்னோ : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ஃபில்டிங் மோசமாக இருந்தது.

குறிப்பாக ஆவேஷ் கான் வீசிய ஒரே ஓவரில் இந்திய அணி வீரர்கள் 2 கேட்சை மிஸ் செய்தனர். இதனை பயன்படுத்தி கொண்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் அந்த ஓவரில் 16 ரன்கள் அடித்தனர்.

லக்னோவில் நடைபெறும் மைதானத்தில் விளக்குகள் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டு இருப்பதால், கேட்ச் பிடிப்பது கடினமாக இருந்தது என்று கருதப்பட்டது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு.. ஆர்சிபி வீரருக்கு வாய்ப்புதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு.. ஆர்சிபி வீரருக்கு வாய்ப்பு

மோசமான ஃபில்டிங்

மோசமான ஃபில்டிங்

ஆனால், அதற்கு பிறகு தான் அந்த சம்பவமே நிகழ்ந்தது. டி20 உலககோப்பை தொடருக்கு முன்பு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் ஃபில்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக முகமது சிராஜ், 2 கேட்ச்களை தவறவிட்டு, பந்தை சிக்சருக்கு கோட்டை விட்டார். இதனால் ரசிகர்கள் கடுப்பாகினர். பந்துவீசிய தீபக் சாஹரே திட்டினார்.

கேட்ச் மிஸ்

கேட்ச் மிஸ்

இப்படி ஃபில்டிங் செய்தால் நிச்சயம் டி20 உலககோப்பையை வெல்ல முடியாது என்று ரவி சாஸ்த்ரி காட்டமாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்யும் போது 38வது ஓவரில் முதல் பந்தில் கிளாசன் பந்தை தூககி அடித்தார். அப்போது பந்து மேலே சென்றது. இதனை பிடிக்க முகமது சிராஜ் ஓடி வந்து, இறுதியில் கோட்டை விட்டார். அதற்குள் தென்னாப்பிரிக்க வீரர்கள் 3 ரன்கள் ஓடியது.

ரவி பிஸ்னாய்

ரவி பிஸ்னாய்

இதே போன்று அடுத்த பந்தில் டேவிட் மில்லர் தூக்கி பந்தை அடித்தார். அப்போது பந்தை பிடிப்பதற்காக ரவி பிஸ்னாய் ஓடி வந்து, பந்தை தொட கூட முடியாமல் கோட்டை விட்டார். இதனால் ஆவேஷ் கான் கடுப்பானார். இதற்கு அடுத்த பந்தில் டேவிட் மில்லர் அடித்த பந்தை பாயிண்டில் நின்ற இஷான் கான், தடுக்க முயன்று கோட்டை விட்டார். இதனால் அந்த பந்தில் பவுண்டரி சென்றது.

பாடம் எடுத்த பால் பாய்

பாடம் எடுத்த பால் பாய்

இதனைத் தொடர்ந்து டேவிட் மில்லர் அடித்த பந்து, சிக்சர் கோட்டை தாண்டி சென்றது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த Ball boy அந்த பந்தை சுலபமாக கேட்ச் பிடித்தார். இதனால், சீனியர் வீரர்கள் கேட்ச் பிடிக்க திணறும் போது, பால் பாயாக நின்ற இளம் வீரர் அதனை சுலபமாக பிடித்தார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரிடம் கேட்ச் எப்படி பிடிப்பது என்று கற்று கொள்ளுங்கள் என்று கூறி வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
2 catch missed by Indian fielders but ball boy teaches them lesson ஒரே ஓவரில் 2 கேட்ச் மிஸ் செய்த இந்தியா..சிக்சர் போன பந்தை சுலபமாக பிடித்த சிறுவன்.. கத்துக்கோங்க பா!
Story first published: Thursday, October 6, 2022, 20:29 [IST]
Other articles published on Oct 6, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X