For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2011 உலககோப்பை வெல்ல காரணமாக இருந்தவர்.. மீண்டும் இந்திய அணியில் சேர்ப்பு.. டிராவிட் செம பிளான்

மும்பை: 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை நாம் யாருமே அனைவராலும் மறக்க முடியாது. இது இந்திய கிரிக்கெட்டையே மாற்றி அமைத்தது.

Recommended Video

Rahul Dravid இடத்திற்கு குறி வைக்கும் Ricky Ponting *Cricket

உலககோப்பையை இந்தியா வென்றதுக்கு கேப்டன் தோனியின் யுத்திகளும், வீரர்களின் கூட்டு முயற்சியும், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் வழிகாட்டுதலும் காரணம்.

ஆனால், இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த நபரை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

இன்னும் 9 மாதம் இருக்கு.. அதற்குள் மும்பை அணி செய்த காரியம்.. இங்கி. தொடர்ந்து 4 போட்டியில் வெற்றி இன்னும் 9 மாதம் இருக்கு.. அதற்குள் மும்பை அணி செய்த காரியம்.. இங்கி. தொடர்ந்து 4 போட்டியில் வெற்றி

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

ஒரு அணியில் பயிற்சியாளர் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று வீரருக்கு முடிந்த அளவுக்கு வழிகாட்டுவார். ஆலோசனைகளை வழங்குவார். ஆனால், அதனை அந்த வீரர்கள் தான் களத்தில் செய்ய வேண்டும். அதற்கு வீரரின் அறிவும், உடலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கு தான் ஒவ்வொரு அணியும் Mental conditioning coach என்ற நபரை வைத்திருப்பார்கள்.

மனதத்துவ நிபுணர்

மனதத்துவ நிபுணர்

அப்படி , இந்திய அணிக்கு பணியாற்றியவர் தான் பேடி உப்டான். இந்திய அணியின் மனத்ததுவ பயிற்சியாளராக இருந்த உப்டான், வீரர்களுக்கு மனதை எப்படி பலமாக்குவது, சவால்களை எப்படி சமாளிப்பது போன்ற யுத்திகளை வீரர்களுக்கு வழங்கினார். சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், சந்தானம் படம் காமெடி ஒன்றில் இவரை டாக்டர் என்று யாரோ உள் மனசுக்கு போய் நம்ப வச்சிருக்காங்க என்று வசனம் இடம்பெற்று இருக்குமே.

வீரர்களுக்கு பயிற்சி

வீரர்களுக்கு பயிற்சி

அதனை தான் பேடி உப்டான், இந்திய அணி வீரர்களுக்கு செய்தார். உலக கோப்பையை வெல்ல முடியும், அதற்கான தகுதி நம்மிடம் இருக்கு என்பதை பேடி உப்டான் வீரர்களுக்கு தனது மனத்தத்துவ பயிற்சி மூலம் நம்ப வைத்தார். உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த உப்டான், தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு அதே பொறுப்பை ஏற்று நடத்த இந்திய அணிக்குள் வந்து இருக்கிறார்.

டிராவிட் பிளான்

டிராவிட் பிளான்

பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் அறிவுறுத்தலின் படி, பிசிசிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. அந்த தொடரிலிருந்து பேடி உப்டான் தனது பணியை தொடங்க உள்ளார். இந்தியா தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நிலையில், வீரர்களுக்கு மனதளவில் ஊக்கம் பெற பேடி உப்டானின் பணி மிகவும் முக்கியமாகும்.

கோலிக்கு நன்மை

கோலிக்கு நன்மை

விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் தற்போது ஃபார்மில் இல்லாமல் தவித்து வருகிறார்கள். விராட் கோலியிடம் பழைய உத்வேகமும் இல்லை. இந்த நிலையில், உப்டான் போன்றவரின் பங்களிப்பு அணியில் இருந்தால் விராட் கோலி மீண்டம் பழைய பாதிரி விளையாட முடியும். டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் பிசிசிஐ, தற்போது உப்டானை பணி அமர்த்தி இருப்பது, இலக்கை நோக்கி சரியாக அணி செல்கிறத என்பதையே காட்டுகிறது.

Story first published: Tuesday, July 26, 2022, 22:43 [IST]
Other articles published on Jul 26, 2022
English summary
2011 ICC world cup winning support staff Paddy upton joins indian team 2011 உலககோப்பை வெல்ல காரணமாக இருந்தவர்.. மீண்டும் இந்திய அணியில் சேர்ப்பு.. டிராவிட் செம பிளான்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X