For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொரோனா வைரஸ் தாக்கம்.. டி20 உலகக்கோப்பை நடக்க வாய்ப்பே இல்லை.. எஸ்கேப் ஆகும் ஆஸி.!

துபாய் : 2020ஆம் ஆண்டில் நடக்க இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் இரண்டு ஆண்டுகள் வரை தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

டி20 உலககோப்பைக்கு வாய்ப்பில்லை... எல்லாத்துக்கும் காரணம் கொரோனா தான்

இந்த உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐசிசி அமைப்பு அந்த தொடரை தள்ளி வைக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பும் அதை முழு அளவில் ஆதரிக்கும் என கூறப்படுகிறது.

இந்திய அணியை வேக வேகமாக தயார் செய்யும் பிசிசிஐ.. அந்த நாட்டுக்கு அனுப்ப அதிரடி திட்டம்?இந்திய அணியை வேக வேகமாக தயார் செய்யும் பிசிசிஐ.. அந்த நாட்டுக்கு அனுப்ப அதிரடி திட்டம்?

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

2020ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. பிப்ரவரி - மார்ச்சில் மகளிர் உலகக்கோப்பை வெற்றிகரமாக நடந்தது. ஆடவர் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி அக்டோபரில் நடக்க ஆஸ்திரேலிய நாட்டில் இருந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டன. கடந்த இரண்டு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இனி போட்டிகள் நடைபெற்றால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதிலும் குழப்பம் உள்ளது.

ஐசிசி கூட்டம்

ஐசிசி கூட்டம்

இந்த நிலையில் ஐசிசி கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதில் 2020 டி20 உலகக்கோப்பை பற்றி விவாதம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

மூன்று முடிவுகள்

மூன்று முடிவுகள்

அந்த கூட்டத்தில் மூன்று முடிவுகள் பற்றி ஆலோசிக்கப்படும். வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி, குறைந்த அளவு ரசிகர்களை அனுமதித்து உலகக்கோப்பை தொடரை நடத்துவது அல்லது ரசிகர்கள் இல்லாத மாலி மைதானத்தில் தொடரை அல்லது உலகக்கோப்பை தொடரை தள்ளி வைப்பது. இதுதான் அந்த மூன்று முடிவுகள்.

என்ன முடிவு?

என்ன முடிவு?

இதில் அனைத்து அணிகளின் வீரர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பு குழு என பலரையும் தனிமைப்படுத்தி, பின் தொடரை நடத்துவது அதிக செலவு ஆகும் பணி ஆகும். மேலும், தொடரின் இடையே யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் தொடரை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

தப்பிக்கும் ஆஸ்திரேலியா

தப்பிக்கும் ஆஸ்திரேலியா

எனவே, தொடரை தள்ளி வைக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவை குறிப்பாக உலகக்கோப்பை தொடரை நடத்த வேண்டிய ஆஸ்திரேலியா முழு அளவில் ஆதரிக்கும் என கூறப்படுகிறது. காரணம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்புக்கு இந்த தொடரால் பெரிய லாபம் இருக்காது என்பது தானாம்.

எப்போது உலகக்கோப்பை நடக்கும்?

எப்போது உலகக்கோப்பை நடக்கும்?

2020 உலகக்கோப்பை தொடர் 2022ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. காரணம் 2021இல் அடுத்த டி20 உலகக்கோப்பை நடக்க உள்ளது. எனவே, இரு ஆண்டுகளுக்கு இந்த தொடர் தள்ளி வைக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

Story first published: Saturday, May 16, 2020, 18:16 [IST]
Other articles published on May 16, 2020
English summary
2020 T20 World cup may be postponed with the support of the hosts Australia says reports
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X