For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா-ஆஸ்திரேலியா உலக கோப்பை மோதல்கள்.. அறிய வேண்டிய தகவல்கள்!

By Veera Kumar

சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான இதற்கு முந்தைய உலக கோப்பை மோதல்கள் குறித்த ஒரு பார்வை ரசிகர்களுக்கு அவசியம். இதோ அந்த சாதனைகள், சோதனைகள் உங்கள் பார்வைக்கு..

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதி போட்டியில் சந்திக்கின்றன. முன்னதாக லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன.

10 facts about India-Australia World Cup semi-final in Sydney

இதுவரை 10 முறை உலக கோப்பைகளில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 7 முறை ஆஸ்திரேலியாவும், 3 முறை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை ஆஸ்திரேலியா 6 முறை உலக கோப்பை அரையிறுதி போட்டிகளுக்குள் சென்றுள்ளது. அதில் ஒன்றிலும் தோற்றதில்லை. 1999ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி டை ஆனது.

நடப்பு உலக கோப்பையில், நியூசிலாந்தும், இந்தியாவும் மட்டுமே தோல்வியே காணாத அணிகளாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக கோப்பை தொடரில், சதம் அடித்த ஒரே இந்திய வீரர் அஜய் ஜடேஜாவாகும்.

இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் இரு சதங்கள் அடித்துள்ளார்.

2011 உலக கோப்பை காலிறுதியில், ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியபோது, இடம் பிடித்த வீரர்களில், டோணி, கோஹ்லி, அஸ்வின், சுரேஷ் ரெய்னா, கிளார்க், ஷேன் வாட்சன், பிராட் ஹேடின், ஜான்சன் ஆகியோர் இந்த உலக கோப்பைக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

நடப்பு உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சிட்னி மைதானத்தில் இந்தியா ஆடுகிறது. ஆனால், ஆஸ்திரேலியா ஏற்கனவே இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் இதே மைதானத்தில் ஆடியுள்ளது.

இந்தியா இப்போட்டியில் வெற்றி பெற்றால், அடுத்தடுத்து இருமுறை பைனலுக்குள் சென்ற அணி என்ற பெருமையை பெறும்.

அரையிறுதி போட்டி மழையாலோ வேறு காரணங்களாலோ, கைவிடப்பட்டால், லீக் ஆட்டங்களில் பெற்ற வெற்றி அடிப்படையில், இந்தியா பைனலுக்குள் பிரவேசித்துவிடும்.

புள்ளி விவர பார்வை: உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன் எடுத்தவர் ரிக்கி பாண்டிங். 5 இன்னிங்சுகளில் மொத்தம், 303 ரன்கள்.

இந்திய தரப்பில் சச்சின் 6 இன்னிங்சுகளில் ஆடி 194 ரன்கள் எடுத்தார்.

அதிகபட்ச ரன் என்றாலும், பாண்டிங்கே. 2003 உலக கோப்பை இறுதி போட்டியில், 140 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில், 1999 உலக கோப்பையில், அஜய் ஜடேஜா 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டீவ் வாக் மற்றும் கிரேக் மெக்டெர்மோட் ஆகியோர் தலா 8 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் உள்ளனர். இந்திய தரப்பில் 9 விக்கெட்டுகளுடன் கபில்தேவ் முதலிடத்திலுள்ளார்.

ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், பாண்டிங் தலா 5 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக ஆடியுள்ளனர். சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 போட்டிகளில் ஆடியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிகபட்ச ரன் 6 விக்கெட் இழப்புக்கு 289 என்பதாகும். 1987ல் இந்த ரன் எட்டப்பட்டது. ஆஸ்திரேலியா நமக்கு எதிராக 2003 உலக கோப்பையில் 2 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்தது.

Story first published: Monday, October 5, 2015, 15:22 [IST]
Other articles published on Oct 5, 2015
English summary
10 facts about India-Australia World Cup semi-final in Sydney.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X