For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி ஹர்பஜன் இல்லை... அஸ்வினுக்கு சேர்ந்த புகழ்.. 2வது டெஸ்டில் அபாரம்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அசத்தல் பந்துவீச்சு மூலம் அஸ்வின் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு சுருண்டது.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்! 6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங்கை முந்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தியா அபாரம்

இந்தியா அபாரம்

டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் ரோகித் சர்மாவின் அதிரடி சதம், ரஹானே மற்றும் ரிஷப் பண்ட்-ன் சிறப்பான அரை சதத்தால் 329 ரன்களை குவித்தது.

திணறல்

திணறல்

இதனைதொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி அஸ்வினின் சுழலில் சிக்கி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆட்டத்தின் முதல் பந்து முதலே நல்ல ஸ்விங்க் இருந்ததால் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் ரன் குவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டார்.

 மேலும் ஒரு சாதனை

மேலும் ஒரு சாதனை

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை முந்தி அஸ்வின் ( 266 விக்கெட்) 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 350 விக்கெட்டுடன் முதலிடத்தில் அனில் கும்ளே உள்ளார். ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டுடன் 3வது இடத்தில் உள்ளார்.

பரிதாப நிலை

பரிதாப நிலை

சென்னை ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமானதாக உள்ளதால் இந்திய அணியும் 2வது இன்னிங்சில் திணறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியா 242 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் இங்கிலாந்து அணி கடுமையாக போராட வேண்டிய சூழலில் உள்ளது.

Story first published: Sunday, February 14, 2021, 16:34 [IST]
Other articles published on Feb 14, 2021
English summary
2nd Test: Ashwin surpasses Harbhajan Singh in most wicket taker indian list
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X