For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஜய் சங்கர் விக். மேக்ஸ்வெல் ரன் அவுட்.. பாக். எதிரான தரமான சம்பவங்கள்..! ஒரு ரீவைன்ட்

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி!

லண்டன்: உலக கோப்பையின் ஒரு பகுதி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில், மிக முக்கிய நிகழ்வுகள் யாராலும் மறக்க முடியாது. அதன் ஒரு சிறு தொகுப்புதான் இது.

முன் எப்போதும் இல்லாத பல விஷயங்கள் இந்த உலக கோப்பையில் நடந்து சலசலப்பையும், விமர்சனங்களையும் முன் வைத்திருக்கின்றன. உலக கோப்பையில், மழை அணிகளுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் தலைவலியாக உருவெடுத்து இருக்கிறது. ஐசிசிக்கு அதனால் பெரும் கெட்ட பெயர்.

அதோடு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன. பல நாட்களாக தொடர்ந்து இந்த விவகாரம், இந்தியா, பாக் போட்டிகள் நடந்ததால் ஓரளவு சமன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டு இருந்தால் ரசிகர்களுக்கும் மட்டுமல்ல... ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருக்கிற தொலைக்காட்சியின் நிலையும் அந்தோ பரிதாபம். ஆனால்.. நல் வாய்ப்பாக, இந்தியா, பாக். போட்டி அனைத்தையும் காப்பாற்றி இருக்கிறது.

பட்டியல் நிலவரம்

பட்டியல் நிலவரம்

தற்போதைய நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் ஆஸி. முதலிடத்தில் உள்ளது. நியூசி. 2வது இடம், இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. 4வது இடம் போட்டியை நடத்தும் இங்கிலாந்து பெற்றிருக்கிறது. முதல் 4 இடங்களை பிடிக்க முட்டி மோதுகின்றன.

பாக்.கிற்கு எதிரான போட்டி

பாக்.கிற்கு எதிரான போட்டி

அந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம், இதுவரை பாகிஸ்தானுடன் மோதிய அனைத்து போட்டிகளிலும் வென்று 100 சதவீத வெற்றியை தன்வசம் வைத்திருக்கிறது புவனேஸ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயம் மட்டுமே இந்தியாவுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு. ஆட்டத்தின் 5வது ஓவரில் தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. காயத்தால் வெளியேற... இளம் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது.

திருப்பம் தந்த விக்.

திருப்பம் தந்த விக்.

கேப்டன் கோலி, விஜய் சங்கரிடம் அந்த ஓவரின் கடைசி இரு பந்துகளை வீசுமாறு பணித்தார். ஆனால்.... தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார் விஜய் சங்கர். அதாவது, அதிரடி தொடக்க ஆட்டக்காரார் இமாம் உல் ஹக்கின் விக்கெட்டை எடுக்க... கோலி உடனே தனது பெரும் மகிழ்ச்சியை களத்தில் வெளிப்படுத்தினார். அந்த சில விநாடி தருணம் கிரிக்கெட் பார்க்கும் ஒவ்வொரு ரசிகராலும் மறக்க முடியாத தருணம்.

சிறந்த ரன் அவுட்

சிறந்த ரன் அவுட்

அடுத்த 2வது நிகழ்வாக பார்க்கப்படுவது... இதுவும் பாக். அணியுடனான ஒரு ஆட்டம். அந்த அணிக்கு எதிராக மேக்ஸ்வெல்லின் சிறப்பான ரன்-அவுட். 17வது போட்டியில் ஆஸ்திரேலியா,பாகிஸ்தான் மோதின. இந்தப் போட்டியில் ஆஸி. வென்றது.

307 ரன்கள் இலக்கு

307 ரன்கள் இலக்கு

அதற்கு முக்கிய காரணம்.. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது தான். அதன் விளைவு, ஆஸி. 307 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் பாகிஸ்தான் பேட்டிங்கில் சிறப்பாக அசத்தி இலக்கிற்கு அருகில் சென்றது. கைவசம் ஒரு விக்கெட்... 42 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது.

சிறப்பான பீல்டிங்

சிறப்பான பீல்டிங்

46வது ஓவரை கானே ரிச்சர்ட்சன் வீச வந்தார். ஷாஹீன் அப்ரிடி அந்த ஒவரின் முதல் 3 பந்துகளை தடுத்து ஆடினார். 4வது பந்தில் அப்ரிடி கவர் திசையில் பந்தை விளாச முயல, அதனை மேக்ஸ்வெல் தடுத்து நிறுத்தினார். பின்னர், தமது திறமையான பீல்டிங்கால், நான் ஸ்டிரைக் திசையை நோக்கி பந்தை வீசினார்.

அந்த விக். போனது

அந்த விக். போனது

அப்போது சஃப்ரஸ் அகமது கோட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். ஒரேயொரு விக்கெட் இருந்த நிலையில், மேக்ஸ்வெல்லின் அற்புத பீல்டிங்கால் அதுவும் போக... பாகிஸ்தானை தடுத்து நிறுத்தியது ஆஸ்திரேலிய அணி.

குல்தீப் பவுலிங்

குல்தீப் பவுலிங்

3வது நிகழ்வும் பாக். இந்தியா போட்டியில் நிகழ்ந்தது தான். இந்தியாவின் 336 இலக்கை துரத்திய பாகிஸ்தான் சிறப்பான தொடக்கம் கண்டது. 2வது விக்கெட்டிற்கு பாபர் ஆசம், பக்கர் ஜமான் பார்ட்னர்ஷிப் கை கொடுத்தது. அப்போது ஆட்டம் பாக். வசம் தான் இருந்தது. ஆனால் குல்தீப்பின் ரிஸ்ட் ஸ்பின் மூலம் அதை ஒட்டு மொத்தமாக சாய்த்தது.

வெற்றி கிடைத்தது

வெற்றி கிடைத்தது

குல்தீப் பந்தில் பாபர் ஆசம் தடுமாற, அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட குல்தீப், போல்டாக்கி ஆட்டத்தை மாற்றினார். தொடர்ந்து பக்கர் ஜமானையும் காலி செய்து, முழு ஆட்டத்தையும் இந்தியா பக்கம் திருப்பினார்.

Story first published: Tuesday, June 18, 2019, 13:03 [IST]
Other articles published on Jun 18, 2019
English summary
3 big movements that happened in icc cricket world cup 2019 against pakistan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X