For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிசிஐ செய்த 3 மெகா சொதப்பல்.. இந்திய அணி அடிவாங்க இது தான் காரணம்.. மாற்றி கொள்வார்களா ?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி தான் டி20 உலககோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் , கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அப்படி தான் நினைத்தனர்.

ஆனால், ரசிகர்களின் கனவை இந்த ஒரே மாதத்தில் காலி செய்துவிட்டது இந்திய அணி. ஆசிய கோப்பையில் தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி என தற்போது ரசிகர்களுக்கு வெறும் சோகமே மிஞ்சியது.

கடந்த 6 மாதமாக நன்றாக விளையாடி கொண்டிருந்த அணி திடீரென்று இப்படி ஏன் சொதப்புகிறது என்ற காரணத்தை தற்போது காணலாம்.

3 பெரும்தலைகளின் தலையீடு.. இந்திய அணிக்குள் அவசர மீட்டிங்.. டிராவிட் தடாலடி நடவடிக்கை! 3 பெரும்தலைகளின் தலையீடு.. இந்திய அணிக்குள் அவசர மீட்டிங்.. டிராவிட் தடாலடி நடவடிக்கை!

சுழற்சி முறை

சுழற்சி முறை

டி20 போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி அரை டஜன் கணக்கில் டி20 தொடரில் கடந்த ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி பல்வேறு வீரர்களை சுழற்சி முறையில் வாய்ப்பு கொடுத்தது. சோதனை செய்கிறேன் என்ற பெயரில் வீரர்களை உள்ளே, வெளியே என்று கொண்டு சென்றதால், வீரர்கள் மனதளவில் குழப்பம் அடைந்துவிட்டனர். இதனால், அடுத்த போட்டியில் நாம் இருப்போமா என்ற பயம் வந்துவிட்டது.

மாறிய பந்துவீச்சாளர்கள்

மாறிய பந்துவீச்சாளர்கள்

இது தான் புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்களின் சொதப்பலுக்கு காரணமாக இருந்திருக்கலாம். எடுத்துக்காட்டாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆவேஷ் கான், அக்சர் பட்டேல் போன்றோருடன் விளையாடி பந்துவீச்சில் கூட்டணி வைத்து நெருக்கடியை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுத்த புவனேஸ்வர் குமாருக்கு, திடீரென்று புதிய கூட்டணியுடன் வீச வேண்டிய சூழல் ஏற்படுவதால், அதறகு ஏற்றார் போல் மனதளவில் மாற்றி கொள்ள நேரம் எடுக்கிறது.

திடீரென்று வந்த சினியர்கள்

திடீரென்று வந்த சினியர்கள்

சீனியர் வீரர்களுக்கு ஓய்வோ இல்லை காயம் காரணமாக அணியில் சேர்க்காமலோ இருந்துவிட்டு, டி20 உலகக் கோப்பைக்கு முன்பு சீனியர்களை அணியில் சேர்த்ததும் தவறாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், சீனியர்கள் இல்லாமலேயே இந்திய அணி நன்றாக செட் ஆன நிலையில், தற்போது ராகுல் போன்றோர் வந்ததும் அணியின் சமநிலையே மாறி விட்டது. இதனால், அணியில் தற்போது இடமில்லை. நீங்கள் பிறகு வாருங்கள் என்று சொல்லிருக்க வேண்டும்.

பும்ராவுக்கு ஏன் ஓய்வு?

பும்ராவுக்கு ஏன் ஓய்வு?

தற்போது இந்திய அணியை மீண்டும் முதலில் இருந்தே கட்டமைக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது. பும்ரா போன்ற வீரரை தொடர்ந்து விளையாட வைத்தால் தான், அவர் நல்ல உடல் தகுதியுடன் இருப்பார். அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு வழங்கியதால், தற்போது உடல் தகுதியை இழந்து இரண்டு மாதத்திற்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பும்ரா போன்றோரை ஒரே தொடரில் சுழற்சி முறையில் பயன்படுத்தினால் மட்டுமே, அவரால் இந்திய அணிக்கு நன்மை. இரும்பை பயன்படுத்தாமல் வைத்து துரு பிடிக்கும் தானே? அது தான் பும்ரா விசயத்திலும் கூட நடந்திருக்கிறது.

Story first published: Thursday, September 22, 2022, 21:11 [IST]
Other articles published on Sep 22, 2022
English summary
3 Biggest Mistake by BCCI ahead of t20 world cup cost india winning chance பிசிசிஐ செய்த 3 மெகா சொதப்பல்.. இந்திய அணி அடிவாங்க இது தான் காரணம்.. மாற்றி கொள்வார்களா ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X