For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரசிகர்களுக்கு கிடைத்த வெற்றி.. போலீசாரின் தடியடி தாக்குதல்.. ஐதராபாத் வாரியம் மீது அதிரடி நடவடிக்கை

ஐதராபாத்: ஐதராபாத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் 3வது டி20 போட்டி வரும் செப்டம்பர் 25ம் தேதி ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய அணிக்கு அஸ்வின் ஏன் முக்கியம்.. 3 காரணங்கள் முன்வைக்கும் நிபுனர்கள்.. ரோகித் ஓகே சொல்வாரா?இந்திய அணிக்கு அஸ்வின் ஏன் முக்கியம்.. 3 காரணங்கள் முன்வைக்கும் நிபுனர்கள்.. ரோகித் ஓகே சொல்வாரா?

போலீசாரின் தடியடி

போலீசாரின் தடியடி

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனைகாக ரசிகர்கள் அதிகளவில் கூடிய சூழலில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தடியடி நடத்தினர். ஒருகட்டத்தில் களவரம் பெரிதாக வெடிக்க, ரசிகர்களை அடித்து ஓட ஒட போலீசார் விரட்டினர். இதில் கூட்டத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்ட ரசிகர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் செகண்ட்ராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

ஆன்லைனில் டிக்கெட் விற்பனை நடத்தாமல், ஆஃப்லைனில் நடத்தியது ஏன்?, போட்டிக்கு 2 நாட்கள் முன்னர் வரை தாமதமாக டிக்கெட் விற்பனை செய்தது ஏன்?, அதிகாலையே ரசிகர்களை வரச்சொல்லிவிட்டு, நீண்ட நேரமாக கவுண்டரை தொடங்காதது ஏன் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

நடவடிக்கை

நடவடிக்கை

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் கிரிக்கெட் வாரியத்தின் மீது 420, 337 மற்றும் 21 /76 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இன்று நடைபெறும் 2வது டி20 போட்டியில் இந்தியா ஒருவேளை வெற்றி பெற்றால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 3வது போட்டி மிக முக்கியமானதாக மாறும். இந்த சூழலில் தடியடியை எதிர்க்கும் வகையில் போட்டியை பார்க்காமல் புறகணிக்கப்போவதாக ஐதராபாத் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Friday, September 23, 2022, 13:50 [IST]
Other articles published on Sep 23, 2022
English summary
Hydrabad Cricket association has been filed 3 cases after Police Did Lathi charge on fans
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X