For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியில்.. கேப்டன் கோலி மீது "3" டாப் வீரர்கள் அதிருப்தி - சூடாகும் "பஞ்சாயத்து"

மும்பை: இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மீது மூன்று இந்திய வீரர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இவர்களுடன் கோலியும் எப்போதும் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் செய்வதை நம்மால் அறிய முடிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி என்பது, உலகின் வேறு எந்த கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கும் கிடைக்காத பேர், புகழை அள்ளிக் கொடுக்கும் ஒன்றாகும்.

மனைவியுடன் நாடு திரும்ப தயார்.. அணி மீட்டிங்கில் கொந்தளித்த இந்திய வீரர் - சமாதானம் செய்த கோலிமனைவியுடன் நாடு திரும்ப தயார்.. அணி மீட்டிங்கில் கொந்தளித்த இந்திய வீரர் - சமாதானம் செய்த கோலி

சச்சின் என்னதான் இந்தியாவின் "மாஸ்டர் பிளாஸ்டர்" என்றாலும், அவரால் ஒரு கேப்டனாக இந்திய அணியில் ஜெயிக்க முடியவில்லை. அவர் ஒரு சாதாரண வீரர் மட்டுமே. ஆனால், கங்குலி, தோனி போன்றோர் ஒரு வீரராக மட்டுமின்றி, இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன்கள் என்ற பெருமையை பெற்றவர்கள்.

ரோல் மாடல் கோலி

ரோல் மாடல் கோலி

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் கேப்டன்ஷிப் எனும் நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருப்பது விராட் கோலி. உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். 32 வயதில் 70 சதங்கள். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 50க்கும் மேல் ஆவரேஜ் என நம்பமுடியாத சாதனைகளை குவித்து வைத்திருப்பவர் இந்திய கேப்டன் விராட் கோலி. இந்த நொடியில், கிரிக்கெட்டை நேசிக்கும் உலகின் பல பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் ரோல் மாடலும் நம்ம கோலி தான்.

2 வீரர்கள் அதிருப்தி

2 வீரர்கள் அதிருப்தி

ஆனால், சமீப காலமாக இவர் மீது வைக்கப்படும் விமர்சனம் கேப்டன்ஷிப் திறன் பற்றியது தான். எனினும், அதைப்பற்றி எல்லாம் அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அவர் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். எனினும், கேப்டன் கோலி மீது மூன்று வீரர்கள் அதிருப்தியில் இருப்பதை நம்மால் அறிய முடிகிறது. இந்த 3 வீரர்களில் பட்டியலில் இருப்பவர்கள் மூவருமே சீனியர்கள் தான். ரோஹித், ரஹானே, ரெய்னா. ஆம்! இந்த 3 வீரர்களும் விராட் கோலி மீது அதிருப்தியில் இருப்பதாகவே தெரிகிறது.

மனதுக்குள் வருத்தம்

மனதுக்குள் வருத்தம்

முதலில் ரோஹித் ஷர்மா. இயற்கையாகவே அமைதியான சுபாவம் கொண்டவர். பேட்டிங்கில் அனல் பறக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுக் கொடுத்தவர் என்பதற்காகவே இவரை சிறந்த கேப்டனாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு முறை இந்திய அணி டி20 போட்டிகளில் தோற்கும் போதும், கோலி - ரோஹித் கம்பேரிசன் இல்லாமல் ஒரு மீம் கூட இருக்காது. இதனால், வெளியில் நட்புடன் இருப்பதாக தெரிந்தாலும், உள்ளுக்குள் இரு பக்கத்திலும் ஈகோ மோதல் உச்சத்தில் இருக்கும். இதில், 3 வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவியை கோலியே தன் வசம் வைத்திருப்பதால், ரோஹித் அந்த கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அணியில் இருப்பதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தோர். டி20ல் கூட தன்னால் கேப்டனாக முடியவில்லையே என்ற வருத்தம் ரோஹித்துக்கு நிறையவே இருக்கிறதாம்.

"ஸ்ப்லிட்" கேப்டன்சி

இரண்டாவது, அஜின்க்யா ரஹானே. இவரும் ரொம்பவே சாஃப்ட்டான வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் துணை கேப்டன். இந்த ஆண்டு தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவில் அந்நாட்டுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. அதன் பின், சொந்த காரணங்களுக்காக கோலி நாடு திரும்ப, ரஹானே அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, இந்திய அணியை 2 போட்டிகளில் ஜெயிக்க வைத்து, 2-1 என்று இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைக்க காரணமாக இருந்தார். அப்போதில் இருந்தே இருவருக்கும் இடையே பனிப்போர் துவங்கிவிட்டது எனலாம். எப்போது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோற்றாலும், "ஸ்ப்லிட்" கேப்டன்சி குறித்தும், ரஹானே குறித்தும் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கிவிடுவார்கள்.

Recommended Video

India - Srilanka தொடர் ரத்தாகிறதா? BCCI என்ன செய்யும் | Oneindia Tamil
ரசிகனின் விருப்பம்

ரசிகனின் விருப்பம்

இறுதியாக, புஜாரா. கடந்த சில டெஸ்ட் தொடர்களில் கன்சிஸ்டன்சி இழந்து வரும் புஜாரா மீது கேப்டன் விராட் கோலி அதிருப்தியில் இருப்பதாகவே தெரிகிறது. இதனால், முதல் டெஸ்ட் போட்டியில் புஜாராவுக்கு பதில் லோகேஷ் ராகுலை மிடில் ஆர்டரில் களமிறக்க கோலி முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. இவர்கள் இருவரில் புஜாரா பெரிதாக எந்த ரியாக்ஷனும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், கோலி சற்று ஆக்ரோஷமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. எது எப்படியோ, அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே ஒவ்வொரு ரசிகனின் விருப்பமாகும்.

Story first published: Monday, July 12, 2021, 19:09 [IST]
Other articles published on Jul 12, 2021
English summary
3 indian players who rift with virat kohli - விராட் கோலி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X