போன சீசன்ல விட்டதை பிடிக்கும் தீவிரத்துடன் 'சின்ன தல'... சாதனைகளுக்காக காத்திருக்காரு... ரசிகர்களும்தான்!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா அந்த அணிக்காக சிறப்பான துவக்கத்தை தந்துள்ளார்.

CSK அபார வெற்றி | Another great win by Chennai super kings | OneindiaTamil

கடந்த போட்டியில் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 52 ரன்களை குவித்திருந்தார்.

உணர்ச்சிவசப்பட்ட ஆர்சிபி ஸ்பின்னர்... அழுதேவிட்ட மனைவி... என்ன காரணம்?

இந்நிலையில் இன்றைய தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன.

பங்கேற்காத ரெய்னா

பங்கேற்காத ரெய்னா

ஐபிஎல் 2020 சீசனில் தனது சொந்த காரணங்களுக்காக வெளியேறிய சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா, இந்த சீசனில் மீண்டும் அணியில் இணைந்து விளையாடி வருகிறார். கடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 52 ரன்களும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 8 ரன்களும் அவர் எடுத்துள்ளார்.

 சாதனைகளுக்கு காத்திருப்பு

சாதனைகளுக்கு காத்திருப்பு

கடந்த இரு வருடங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் அவர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிலையில் இந்த தொடரில் அவர் 3 சாதனைகளை பூர்த்தி செய்ய காத்திருக்கிறார். அவரை போலவே அவரது அணியான சிஎஸ்கேவும் அவரது ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

காத்திருக்கும் சின்ன தல

காத்திருக்கும் சின்ன தல

சிஎஸ்கேவின் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, கடந்த இரு போட்டிகளையும் சேர்த்து ஐபிஎல்லில் இதுவரை 195 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் தனது 200வது ஐபிஎல் போட்டியை பூர்த்தி செய்ய இன்னும் 5 போட்டிகளே பாக்கி உள்ளது. இந்த எண்ணிக்கையில் அணியின் கேப்டன் தோனி 206 போட்டிகளை பூர்த்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காத்திருக்கும் வீரர்கள்

மேலும் காத்திருக்கும் வீரர்கள்

இந்த எண்ணிக்கையில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா 203 போட்டிகளையும் தினேஷ் கார்த்திக் 199 போட்டிகளையும் விராட் கோலி 195 போட்டிகளையும் பூர்த்தி செய்துள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் இவர்கள் தங்களது 200வது போட்டிகளை பூர்த்தி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

200 சிக்ஸ் சாதனை

200 சிக்ஸ் சாதனை

இதையடுத்து ஐபிஎல் சீசன்களில் இதுவரை சுரேஷ் ரெய்னா 198 சிக்ஸ்களை அடித்துள்ளார். அவர் 200வது சிக்ஸ்களை பூர்த்தி செய்ய இன்னும் 2 சிக்ஸ்களே மீதம் உள்ளது. இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்த எண்ணிக்கையை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

570 ரன்கள் தேவை

570 ரன்கள் தேவை

அடுத்ததாக, ஐபிஎல் போட்டிகளில் 6000 ரன்கள் சாதனையை எட்டிப்பிடிக்க சுரேஷ் ரெய்னாவிற்கு இன்னும் 570 ரன்கள் தேவைப்படுகிறது. அவர் இதுவரை 5430 ரன்களை எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் விராட் கோலி 5944 ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளார் அவருக்கு இந்த சாதனையை செய்ய 56 ரன்களே மீதம் உள்ளன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
If he scores another 570 runs in this edition of the IPL, Suresh Raina will reach the landmark of 6000 runs in the competition
Story first published: Monday, April 19, 2021, 18:52 [IST]
Other articles published on Apr 19, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X