For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யப்பா சாமி ஆளை விடுங்க.. உசுரு தான் முக்கியம்.. தெறித்து ஓடிய 3 வெ.இண்டீஸ் வீரர்கள்!

ஜமைக்கா : இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து மூன்று வீரர்கள் விலகிக் கொண்டுள்ளனர்.

அவர்களை தவிர்த்து 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவே அந்த 3 வீரர்களும் தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

எச்சிலுக்கு பதிலா பிட்ச்ச சரியா யூஸ் பண்ணி பந்த போடுங்க... கும்ப்ளே ஆலோசனைஎச்சிலுக்கு பதிலா பிட்ச்ச சரியா யூஸ் பண்ணி பந்த போடுங்க... கும்ப்ளே ஆலோசனை

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் தொடர் ஏதும் நடைபெறவில்லை. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் நீங்காவிட்டாலும் அனைத்து கிரிக்கெட் தொடர்களையும் துவங்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

கிரிக்கெட் தொடர்கள்

கிரிக்கெட் தொடர்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நவம்பரிலும், இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் ஆகஸ்டிலும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக ஜூலை மாதத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடக்க உள்ளது.

சம்மதம் தெரிவித்தன

சம்மதம் தெரிவித்தன

இங்கிலாந்து நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆட முன்பு திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த தொடரை நடத்த இரு அணிகளும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தான் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட தடைக்கு பின் நடத்தப்படும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர்.

பயிற்சி துவக்கம்

பயிற்சி துவக்கம்

இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியை துவக்கி உள்ளனர். மைதானங்களை வெளியாட்கள் யாரும் வராமல் பாதுகாக்கும் பணிகளும் துவங்கி உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்கள் நாட்டில் பயிற்சி முகாமில் பங்கேற்று உள்ளனர்.

தனிமை

தனிமை

இங்கிலாந்து நாட்டுக்கு ஜூன் 9 அன்று வெஸ்ட் இண்டீஸ் அணி வர உள்ளது. மான்செஸ்டரில் மூன்று வாரங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தனிமையில் இருப்பார்கள். தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரு அணி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

பாதுகாப்பான சூழல்

பாதுகாப்பான சூழல்

மூன்று போட்டிகளும் ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் தான் நடக்க உள்ளது. மேலும், உயிர் பாதுகாப்பு சூழலில் (Bio Secure Environment) நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக 3 வீரர்கள் தாங்கள் இந்த தொடரில் பங்கேற்க விரும்பவில்லை என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகத்திடம் கூறியதாக தெரிகிறது.

மூன்று வீரர்கள் யார்?

மூன்று வீரர்கள் யார்?

அந்த மூன்று வீரர்கள் டேரன் பிராவோ, ஷிம்ரான் ஹெட்மயர், கீமோ பால் ஆகியோர் தான். அவர்கள் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல அச்சம் தெரிவித்து இந்த தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி

வெஸ்ட் இண்டீஸ் அணி

இங்கிலாந்து செல்லும் வெஸ்ட் இண்டீஸ் அணி - ஜேசன் ஹோல்டர், கிரைய்க் பிராத்வைட், ஷாய் ஹோப், ஷேன் டாவ்ரிச், ராஸ்டன் சேஸ், ஷேமார் ப்ரூக்ஸ், ரக்கீம் கார்ன்வால், க்ருமா போனர், அல்சாரி ஜோசப், சேமார் ஹோல்டர், ஜான் கேம்பல், ரேமன் ரேய்ஃபர், கீமர் ரோச், ஜெர்மைன் பிளாக்வுட், ஷானான் கேப்ரியல்

Story first published: Thursday, June 4, 2020, 13:06 [IST]
Other articles published on Jun 4, 2020
English summary
3 West Indies players opt out of England tour says reports. It is also said that they are afraid of spread of Coronavirus.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X