For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 இளம் வீரர்களுக்கு ஏமாற்றம் அளித்த பி.சி.சி.ஐ. – என்ன நடந்தது?

சென்னை: தென்னாப்பிரிக்க தொடருக்கான விராட் கோலி தலைமையிலான 18 வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது.

இதில் ஃபார்மில் இல்லாத சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானேவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்! புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்!

இதனால் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த இளம் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

ஐ.பி.எல். தொடரில் கலக்கியதன் மூலம் இந்திய ஒருநாள் அணியில் சூரியகுமார் யாதவ்-க்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சிறப்பாக விளையாடியதால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க அவசரமாக அழைக்கப்பட்டார். அதே போல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பெற்று இருந்தார். இருப்பினும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் கண்டிப்பாக அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

கே.எஸ். பாரத்

கே.எஸ். பாரத்

28 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பாரத், ஐ.பி.எல். தொடரில் தனது திறமையை நிரூபித்தவர். ரஞ்சி கோப்பையிலும் 78 போட்டிகளில் விளையாடி 9 சதம்,23 அரைசதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்தியவர். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலும் சாஹாவுக்கு காயம் ஏற்பட்ட போது விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தினார். இதனால் சாஹாவுக்கு தரும் வாய்ப்பை இவருக்கு தர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் அணியில் இடம்பெறவில்லை.

அபிமன்யூ ஈஸ்வரன்

அபிமன்யூ ஈஸ்வரன்

26 வயதான அபிமன்யூ ஈஸ்வரன், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்று இருந்தார். மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஏ அணியில் இருந்த அவர் ஒரு போட்டியில் சதமும் விளாசி அசத்தினார். ரஞ்சி கோப்பையில் 14 சதம், 19 அரைசதம் என அசத்திய அவருக்கும் மாற்று வீரராக கூட அணியில் வாய்ப்பில்லை.

Recommended Video

BCCI announces India squad for South Africa Test series | Oneindia Tamil
காரணம்

காரணம்

தென்னாப்பிரிக்க தொடர் கடினமாக இருக்கும் என்பதால் ஏற்கனவே அங்கு டெஸ்டில் விளையாடிய அனுபவம் உள்ள சீனியர் வீரர்களுக்கு கடைசி வாய்ப்பாக இந்த தொடர் உள்ளது. ஏற்கனவே ஸ்ரேயாஸ் ஐயர், மாயங் அகர்வால், விஹாரி என மூன்று வீரர்கள் இடம் பெற்று இருப்பதால், இவர்களை அணியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, December 9, 2021, 23:22 [IST]
Other articles published on Dec 9, 2021
English summary
BCCI selectors Picks 18 Players For India, SA Tour. But Youngsters like Suryakumar, KS Bharat and Abhimanyu Easwaran Exclusion surprised Many fans
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X